வீரதீர செயல் புரிந்தவர்களுக்கான அண்ணா பதக்கம் பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர்கள் தகவல்
2021-12-08@ 00:06:05

செங்கல்பட்டு: செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் வழங்கப்படும் “வீரத்துக்கான அண்ணா பதக்கம்” பெற தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என கலெக்டர்கள் செங்கை ராகுல்நாத், காஞ்சி ஆர்த்தி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அவர்கள் விடுத்துள்ள அறிக்கை.உயிர், உடைமை போன்றவற்றை காப்பற்றுவதில் துணிச்சலான செயல் புரியந்த பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு “வீரத்துக்கான அண்ணா பதக்கம்” 2022ம் ஆண்டு குடியரசு தின விழாவின்போது, மாநில அளவில் தேர்வு செய்யும் தலா 3 பொது மக்கள் மற்றும் 3 அரசு ஊழியர்களுக்கும் ₹1 லட்சம், பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ் ஆகியவை தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்குவார்.
அண்ணா பதக்கத்துக்கான விண்ணப்ப படிவம் https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து, உயிர், உடமை ஆகியவற்றை காப்பாற்றுவதில் துணிச்சலாக செயல் புரிந்த விவரத்தை ஆங்கிலம் மற்றும் தமிழில் விரிவான அறிக்கையை படிவத்துடன் பூர்த்தி செய்து, பேரறிஞர் அண்ணா மாவட்ட விளையாட்டு அரங்கம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், பழைய ரயில்வே ரோடு, காஞ்சிபுரம் என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் நாளை மாலை 5 மணிக்குள் 3 நகல்களாக அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 7401703481 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அஞ்சுகிராமம்-வழுக்கம்பாறை சாலை அகலப்படுத்தப்படுமா?: பொதுமக்கள் எதிர்பார்ப்பு!
ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில், வெங்காயம் விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
418 ஆண்டுகளுக்கு பின் நடக்கிறது, திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலில் நாளை கும்பாபிஷேகம் கோலாகல ஏற்பாடுகள்; பக்தர்கள் குவிந்தனர்
கோவை விமானநிலையத்தில் பாஜ எம்பி சுனிதா, துக்கலுக்கு தேவேந்திர குல வேளாளர்கள் வரவேற்பு
தஞ்சை ஜெபமாலைபுரத்தில் குப்பைக்கிடங்கில் ஏற்பட்ட தீயில் சிக்கி முன்னாள் ராணுவ வீரர் உயிரிழப்பு
காஞ்சிபுரம் அருகே பரபரப்பு வாந்தி, வயிற்றுப்போக்கால் தாய், மகன் பரிதாப சாவு 20 பேருக்கு பாதிப்பு
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!