SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிடிவி. தினகரனை கைது செய்ய கோரி அதிமுகவினர் சாலை மறியல்

2021-12-07@ 00:06:28

பெரம்பூர்: ஜெயலலிதா நினைவு தினத்தை முன்னிட்டு அதிமுக சார்பில் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் மெரினா கடற்கரையில் உள்ள அவரது சமாதியில் அஞ்சலி செலுத்த நேற்று முன்தினம் சென்றனர். அங்கு, அஞ்சலி செலுத்தி விட்டு வெளியே வரும்போது அமமுக தொண்டர்கள் ஒன்று சேர்ந்து ஓபிஎஸ் கார் மீது செருப்பை வீசினர். எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்து தகராறில் ஈடுபட்டனர். இதுகுறித்து அதிமுக சார்பில் காவல் துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுக மூத்த தலைவர்கள் காரை வழிமறித்து அமமுகவினர் தகராறில் ஈடுபட்டதை  கண்டித்து, நேற்று மாலை திருவிக நகர் தொகுதிக்கு உட்பட்ட ஓட்டேரி மேம்பாலம் பகுதியில் அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  திருவிக நகர் பகுதி செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், பெண்கள் உட்பட சுமார் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அப்போது, அமமுக தொண்டர்களை கட்டவிழ்த்து விட்டு வன்முறையில் ஈடுபடும் டிடிவி தினகரனை கைது செய்ய வேண்டும் என அவர்கள் கோஷமிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தலைமைச்செயலக காலனி குடியிருப்பு போலீசார் அவர்களிடம் சமரசம் பேசி கலைந்து போகச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • trainnnnnjobbb

    ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

  • oil-hair-peru-27

    சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

  • Republic Day Tamilnadu

    Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்