மதுரையில் மல்லிகைப்பூ: கிலோ ரூ2500க்கு விற்பனை
2021-12-06@ 17:45:31

மதுரை: மதுரை மாவட்டத்தில் தொடர் மழையால் பூக்கள் சாகுபடி பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. விளைநிலங்களில் செடியில் இருந்து பூக்கள் உதிர்ந்து வருகின்றன. தண்ணீர் தேங்கிய நிலங்களில் பூச்செடிகள் அழுகுகின்றன. இதனால், மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள ஒருங்கிணைந்த மலர் வணிக வளாகத்திற்கு, சுற்றுப்புற கிராமங்களிலிருந்து வரும் பூக்கள் வரத்து குறைந்துள்ளது. அதே நேரம் சபரிமலை சீசன் தற்போது துவங்கியுள்ளதால், பூக்கள் தேவை அதிகரித்துள்ளது.
தேவைக்கேற்ப மார்க்கெட்டிற்கு வரத்தில்லை. இதனால், பூக்கள் விலை நேற்று கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பூ மார்க்கெட்டில் கடந்த வாரம் கிலோ ரூ.1000க்கு விற்பனையான மல்லிகை பூ நேற்று ரூ.2,500க்கு விற்பனையானது. இதேபோல, பிச்சி ரூ.800, முல்லைப்பூ ரூ.900, சம்பங்கி ரூ.200, செவ்வந்தி ரூ.250, அரளி ரூ.400, மரிக்கொழுந்து ரூ.150 என விற்பனையானது.
மேலும் செய்திகள்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,480 -க்கு விற்பனை
ஏறுமுகத்தில் தங்கத்தின் விலை; 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.38,336க்கு விற்பனை
வீட்டு உபயோக சிலிண்டர் விலையில் மாற்றமில்லை: வர்த்தக காஸ் சிலிண்டர் விலையில் ரூ187 குறைப்பு
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ856 உயர்வு
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 79.11 ஆக வீழ்ச்சி
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாக உயர்வு.: சவரன் ரூ.38,280 -க்கு விற்பனை
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!