SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

அதிமுகவின் முறைகேடுகள்

2021-12-06@ 00:00:49

இந்தியாவின் கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக கருதப்படும் தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளாக நடந்த முறைகேடுகளும் அதிகம். அதிமுக ஆட்சியில் பள்ளி கல்வி மாணவர்களுக்கு வழங்கப்படும் இலவச பொருட்கள் தொடங்கி, மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை வரை அனைத்திலும் ஊழல் கொடிக்கட்டி பறந்தது. ஆதிதிராவிட மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையை வழங்குவதில் காலம் தாழ்த்தியதோடு, அதற்கான தொகையும் அடிக்கடி மாயமானது.

அதிமுக ஆட்சிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி உதவித்தொகையில் ரூ.17.36 கோடி முறைகேடு நடந்திருப்பது இப்போது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, 52 கல்விநிறுவனங்கள் மற்றும் அரசு அதிகாரிகளின் மீது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விசாரணையில் ஆதிதிராவிட மாணவர்களுக்கு உதவி தொகையை வழங்கியதாக கூறி அதிமுக ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் கோடிக்கணக்கில் பணத்தை சுருட்டியது தெரிய வந்துள்ளது.

சென்னையைச் சேர்ந்த வக்கீல் அசோக்குமார் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தலைமை அலுவலகத்தில் கடந்த 2018ம் ஆண்டு அளித்த புகாரில், தமிழக அரசின் கலை, அறிவியல், பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி, மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்காக, 2011 முதல் 2014ம் ஆண்டு வரை அரசு சார்பில் ஒதுக்கப்பட்ட கல்வி உதவி தொகையில் ரூ.17 கோடியே 36 லட்சத்து 30 ஆயிரத்து 369 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அதிமுக ஆட்சிக்காலத்தில் இப்புகாரை அடக்கி வாசித்த லஞ்ச ஒழிப்புத்துறையினர், இப்போது திமுக ஆட்சிக்காலத்தில் நடந்த ஊழலை வெட்ட வெளிச்சமாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர். சென்னை, கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், மதுரை, கன்னியாகுமரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தேனி, தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் உள்ள அரசு உயர் கல்வி நிறுவனங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் இம்முறைகேட்டில் சிக்கியுள்ளனர். அவர்களை விரைவில் கைது செய்யவும் வாய்ப்புகள் உள்ளன. இம்முறைக்கேட்டில் ஹைலைட் என்னவென்றால், பெரம்பலூரில் இல்லாத கல்லூரி பெயரில் ரூ.58.70 லட்சத்தை சுருட்டிவிட்டனர்.

ஒரே மாணவருக்கு ஒரே கல்வியாண்டில் பலமுறை கல்வித்தொகை வழங்கியதாகவும் போலி கணக்குகளை எழுதி வைத்துள்ளனர். எஸ்எஸ்எல்சிக்கு மேல் உயர்கல்வி படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கான மத்திய அரசின் ‘‘போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித்தொகை’’ திட்டத்தில் அதிமுக அரசு ரூ.800 கோடி முறைகேடு செய்ததை சிஏஜி தணிக்கை அறிக்கை ஏற்கனவே தெரிவித்தது. அதன் தொடர்ச்சியாக இப்போது தமிழக அரசின் கல்வி உதவி தொகை தொடர்பான லஞ்ச ஒழிப்புத்துறையின் விசாரணைகளும் அதிமுகவினரை கலக்கத்தில் ஆழ்த்தியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ncc-modi-medal-28

  டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

 • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

  ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

 • flag-drones-display-27

  காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்