மாணவியை தற்கொலைக்கு தூண்டியதாக போக்சோவில் மாணவன் கைது
2021-12-05@ 02:33:53

கீழ்ப்பாக்கம்: கல்லூரி மாணவி தற்கொலைக்கு காரணமான மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். சென்னை அண்ணாநகர் கிழக்கு, குஜ்ஜி தெருவை சேர்ந்தவர் விஜயகுமார். இவரது 17 வயது மகள், அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 30ம் தேதி அதே பகுதியில் உள்ள தாத்தா வீட்டுக்கு சென்ற மாணவி, அங்குள்ள குளியலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவலறிந்து வந்த டி.பி.சத்திரம் போலீசார், மாணவி சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசாதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும், வழக்கு பதிந்து, மாணவியின் செல்போனை ஆய்வு செய்தபோது, அதே பகுதியை சேர்ந்த முருகப்பெருமாள் என்பவரின் மகன் ஸ்ரீராம் (19) என்ற கல்லூரி மாணவரை, மாணவி காதலித்தது தெரிந்தது. கடந்த சில நாட்களுக்கு முன், வேறொரு பெண்ணுடன் இருக்கும் படத்தை மாணவியின் செல்போனுக்கு ஸ்ரீராம், வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார்.
தன் காதலன் வேறொரு பெண்ணை காதலிப்பதை அறிந்த மாணவி, மனமுடைந்து தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இதையடுத்து, இந்த வழக்கு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. போலீசார், ஸ்ரீராமை பிடித்து விசாரித்தபோது, மாணவியின் தற்கொலைக்கு அவர்தான் காரணம் என தெரியவந்தது. இதனால் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து நேற்று மாலை ஸ்ரீராமை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மேலும் செய்திகள்
அதிமுகவில் 4 பிரிவுகளாக இருக்கிறார்கள்; இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம் குறித்து ஜனநாயக முறைப்படி நடவடிக்கை.! சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
அனைவரும் ஒன்றுபட வேண்டும்; அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
தமிழகத்தில் இன்று 7 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
பள்ளிகளில் மாணவர்களிடையே புத்தகம் வாசிப்பு இயக்க துவக்க விழா: பள்ளிக்கல்வித்துறை
கட்சிக்கு களங்கம் ஏற்படுத்திய எடப்பாடி பழனிசாமியை எம்.ஜிஆர், ஜெயலலிதாவின் ஆன்மா மன்னிக்காது: ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் பேட்டி..!!
மணிவிழா காணும் அன்புச் சகோதரர் எழுச்சித் தமிழர் திருமாவளவனை நெஞ்சார வாழ்த்துகிறேன்: முதல்வர் மு.க.ஸ்டாலின், சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் வாழ்த்து..!!
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!