3 வாலிபர்களை வெட்டிய தந்தை, மகன்கள் கைது
2021-12-05@ 02:27:55

அம்பத்தூர்: அம்பத்தூர் அடுத்த கொரட்டூர், கங்கை அம்மன் கோயில் தெருவை சேர்ந்த ரவுடி அரவிந்தன் (24), கடந்த 2018ம் ஆண்டு ஜூலை மாதம் முன்விரோதம் காரணமாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் திருமுல்லைவாயல், மேட்டு தெருவை சேர்ந்த ஆகாஷ் (25), கொரட்டூர், காமராஜர் நகரை சேர்ந்த பிரசாந்த் (27), அவரது தம்பி மணி (25) உள்பட உள்பட 8 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை ஆகாஷ், பிரசாந்த், மணி ஆகிய மூவரும் வழக்கு தொடர்பாக பூந்தமல்லி நீதிமன்றத்திற்கு சென்றனர்.
பின்னர், அங்கிருந்து மூவரும் அம்பத்தூரை அடுத்த பாடிக்கு வந்தனர். இதுபற்றி அறிந்த அரவிந்தனின் தந்தை ரவி, சகோதரர்கள் அப்பன்ராஜ் (32), விவேக் (30) ஆகியோர், பாடி பஸ் நிறுத்தத்தில் அவர்கள் மூவரையும் விரட்டி சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். இதில், மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு உயிருக்கு போராடினர்.
தகவலறிந்து வந்த கொரட்டூர் போலீசார், படுகாயமடைந்த மூவரையும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதுகுறித்து கொரட்டூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான அப்பன்ராஜ் (32), விவேக்(30), ரவி(65) ஆகிய மூவரையும் நேற்று மாலை கைது செய்தனர்.
மேலும் செய்திகள்
சென்னை அரும்பாக்கம் வங்கிக் கொள்ளை வழக்கு.: மொத்தம் 31 கிலோ தங்கத்தை தனிப்படை போலீஸ் மீட்பு
காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற சாதனையாளர்களுக்கு ரூ.4.31 கோடி ஊக்கத் தொகை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
விநாயகர் சதுர்த்திக்கு பணம் வசூலிக்கும் அமைப்புகள் எவை? சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 5 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
புலி பட சம்பள விவகாரம்; நடிகர் விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கு: வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை.! ஐகோர்ட் உத்தரவு
ரூ.161 கோடியில் 16 துணை மின் நிலையங்களை காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!