SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மாநிலங்களின் உரிமை பறிப்பு

2021-12-05@ 01:48:14

ஒ ன்றிய அரசின் அணைகள் பாதுகாப்பு மசோதாவுக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளன. மாநிலங்களின் உரிமையை பறிக்கும் இம்மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டுமென திமுக எம்பிக்கள் தங்களது எதிர்ப்பை வலுவாகவே வெளிப்படுத்தி உள்ளனர். இந்தியாவை பொறுத்தவரை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அணைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய அணைகள் உள்ளன. இவற்றில் 150க்கும் மேற்பட்ட அணைகள் 100 ஆண்டுகளை கடந்தவை. இவற்றில் பல அணைகள் உறுதியற்ற கட்டுமானங்களால் உடைந்து வருகின்றன.

எனவே, அணைகள் பாதுகாப்பு மசோதாவால் நாடு முழுவதும் உள்ள அணைகளின் பாதுகாப்பிற்கு ஒரே மாதிரியான வழிமுறைகள் வகுக்கப்படும் என கூறுகிறது ஒன்றிய அரசு. ஆனால், இந்த மசோதா நிறைவேறினால் தமிழகத்திற்கு அதிக பாதிப்புள்ளதாக கருதப்படுகிறது. அதாவது, ஒரு மாநிலத்தில் உள்ள அணை அந்த மாநிலத்துக்கே சொந்தமானது என்பதைத்தான் மறைமுகமாக இந்த மசோதா குறிப்பிடுகிறது. இதன்படி, ஒரு அணையின் உறுதித்தன்மை, தேக்கி வைக்கும் நீரின் அளவு, வெளியேற்றப்படும் நீரின் அளவு, இவைகளையெல்லாம் அந்தந்த மாநில அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்று விடும். இதுதொடர்பான புள்ளி விபரங்களை ஒவ்வொரு மாநில அரசும் கட்டாயம் வைத்திருக்க வேண்டுமென்கிறது ஒன்றிய அரசு.

இதன்மூலம் பிற மாநிலங்களில் இருந்தாலும், தமிழகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெரியாறு, பரம்பிக்குளம், சிறுவாணி உள்ளிட்ட அணைகள் தொடர்பான விவகாரங்களில், தமிழகம் தலையிட முடியாது என்ற நிலை உருவாகலாம் என ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். ஏற்கனவே, பெரியாறு அணை பழமையானது. உடைந்து விடும். 142 அடி தண்ணீர் தேக்கக்கூடாது என கேரள அரசு பல்வேறு முட்டுக்கட்டைகளை போட்டு வருகிறது. பேபி அணையை பலப்படுத்தி 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும், பல்வேறு காரணங்களை கூறி இதற்கு அனுமதியளிக்க மறுத்து வருகிறது கேரள அரசு. இந்த சூழலில் அணைகள் பாதுகாப்பு மசோதாவால், இனி கேரள அரசின் முடிவே இறுதியாக இருக்கும். 136 அடிக்கு மேல் தண்ணீரை தேக்க விடாது.

இதுபோன்ற பிரச்னை தமிழகத்திற்கு மட்டுமல்ல... மற்ற மாநிலங்களிலும் உள்ளன. எனவேதான், பிற மாநில அரசுகள் இம்மசோதாவை தொடர்ந்து எதிர்த்து வருகின்றன. முதல்வர் மு.க.ஸ்டாலினும், கூட்டாட்சி தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான, இந்த மசோதாவை உடனடியாக வாபஸ் பெற வேண்டும். மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதி காரமானது என தெரிவித்துள்ளார். வேளாண் திருத்த சட்டம் போலவே, அணைகள் பாதுகாப்பு மசோதாவும் விவசாயத்திற்கு எதிரானது. பாசன நிலங்களுக்கு பிற மாநில தயவை எதிர்நோக்கி காத்திருக்க முடியாது என விவசாயிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். எனவே, ஒன்றிய அரசு அணைகள் பாதுகாப்பு மசோதாவை திரும்பப் பெற வேண்டுமென்பதே பெரும்பாலான மாநிலங்களின் ஒருமித்த குரலாக இருக்கிறது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ncc-modi-medal-28

  டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

 • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

  ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

 • flag-drones-display-27

  காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்