முல்லை பெரியாறுக்கு போலீஸ் பாதுகாப்பு: உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு
2021-12-05@ 01:40:40

புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணைதொடர்பாக கேரளாவை சேர்ந்த ஜாய் ஜோசப் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இதில், தமிழக அரசும் வாதாடி வருகிறது. இந்நிலையில், மதுரையை சேர்ந்த ஸ்டாலின் பாஸ்கரன் சார்பாக வழக்கறிஞர் ஜெய்சுகின், உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அணையின் நீர்மட்டத்தால் அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்பது பலமுறை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இருந்தும், அணை குறித்து தேவையற்ற அச்சுறுத்தல்கள் வெளியாகின்றன. இதுபோன்ற பொய்களை பரப்புவதன் மூலம் அணைக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, முல்லைப் பெரியாறு அணைக்கு ஒன்றிய போலீஸ் படையின் பாதுகாப்பை வழங்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும், பிரதான வழக்கில் எங்களையும் மனுதாரராக இணைத்துக் கொள்ள வேண்டும்,’ என கோரப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
அதிமுகவை முடக்கப் பார்க்கிறார் ஓபிஎஸ்: ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனு..!
காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் மூன்றாவது முறையாக ஒத்திவைப்பு.: அடுத்த கூட்டத்துக்கான தேதி குறிப்பிடவில்லை
ஊட்டச்சத்து மிகுந்த உணவு வழங்குவதற்கான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்படுத்துவதில் ‘முன்னோடி மாநிலமாக‘ தமிழ்நாடு திகழ்கிறது...அமைச்சர் சக்கரபாணி உரை
இரட்டை மடிப்பு வலை விவகார வழக்கு; இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லியில் இருந்து துபாய்க்கு புறப்பட்ட விமானம் பாகிஸ்தானில் தரையிறங்கியதால் பரபரப்பு
நுபுர் சர்மா மீதான கண்டன விவகாரம் அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு கடிதம்
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!