SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டெஸ்ட் தொடரை வென்றது இலங்கை

2021-12-04@ 01:05:09

காலே: வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் நடந்த 2வது டெஸ்டில், 164 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. காலே சர்வதேச ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 204 ரன்னும், வெஸ்ட் இண்டீஸ் 253 ரன்னும் எடுத்து ஆல் அவுட்டாகின. 49 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி 4ம் நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 328 ரன் எடுத்திருந்தது.

தனஞ்ஜெயா 153, எம்புல்டெனியா 25 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். எம்புல்டெனியா 39 ரன் எடுத்து ஹோல்டர் வேகத்தில் கிளீன் போல்டானார். இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 345 ரன் என்ற ஸ்கோருடன் 2வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது (121.4 ஓவர்). தனஞ்ஜெயா 155 ரன்னுடன் (262 பந்து, 11 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் பெருமாள் 3, சேஸ் 2, ஹோல்டர், பிராத்வெய்ட் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து, 297 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி, லசித் எம்புல்டெனியா - ரமேஷ் மெண்டிஸ் சுழல் கூட்டணியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் 132 ரன்னுக்கு சுருண்டு (56.1 ஓவர்) 164 ரன் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. எம்புல்டெனியா, ரமேஷ் தலா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினர்.

முதல் டெஸ்டில் 187 ரன் வித்தியாசத்தில் வென்றிருந்த இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. தனஞ்ஜெயா டி சில்வா ஆட்ட நாயகன் விருது, ரமேஷ் மெண்டிஸ் தொடர் நாயகன் விருது பெற்றனர்.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ragul-priyanka-25

    நாம் ஒன்றாக நடக்கும்போது அடிகள் வலுவாக இருக்கும்; இந்திய ஒற்றுமை பயணத்தில் இணைந்த அண்ணன் - தங்கை..!!

  • ukrain-dark

    இருளில் தவிக்கும் உக்ரைன் மக்கள்: மின் உற்பத்தி நிலையங்களை குறி வைத்து ரஷ்யா தாக்குதல்..!

  • kolathur-chennai

    சென்னை கொளத்தூரில் 1.27 கோடியில் இறகுப்பந்து விளையாட்டு அரங்கை திறந்து வைத்து வீரர்களுடன் உற்சாகமாக விளையாடிய முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

  • china-factory-fire-22

    சீனாவில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து; 36 பேர் உயிரிழப்பு..!!

  • newyork-blizzard

    நியூயார்க்கில் பனிப்புயல் வீசுவதால் வீட்டிற்குள் முடங்கிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்