SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தொடரும் அதிரடி

2021-12-04@ 00:08:13

தமிழக அரசு துறைகளில்  காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மற்றும் போட்டித்தேர்வுகள் மூலம்  நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் எனப்படும்  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப்பணியிடங்கள்  நிரப்பப்படுகின்றன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அரசுப்பணிகளில்  தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர் நியமிக்கப்படுவதாகவும், இதனால்  அரசு போட்டித்தேர்வுகளில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் வகையில் அரசு போட்டித்தேர்வுகளில், தமிழ் மொழி பாடத்தாள்  கட்டாயமாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக பல்வேறு  அரசியல் கட்சித்தலைவர்களும், தேர்வர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின்போது, மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது  இத்துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அவர், தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும்  மாநில பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்த  இளைஞர்களை 100 சதவீதம் தேர்வு செய்யும் வகையில் அனைத்து போட்டித்தேர்வுகளிலும்  தமிழ்மொழி பாடத்தாளில் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவித்தார். அரசுப்பணி நியமனங்களில்  பெண்களுக்கான இடஒதுக்கீட்டை 40 சதவீதமாக உயர்த்த சட்டத்திருத்தம்  மேற்கொள்ளப்படும் எனவும் அறிவித்தார்.

அமைச்சரின் அறிவிப்பையடுத்து, தமிழக அரசின்  போட்டித்தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாளில் தேர்ச்சியை கட்டாயமாக்கி, தமிழக அரசு தற்போது அரசாணை  வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய  தேர்வுகளில், தமிழ் மொழித்தாள், தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத்திட்டம் பத்தாம்  வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுவதாகவும், மேற்கண்டவாறு நடத்தப்படும்  கட்டாய தமிழ் மொழித்தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி  கட்டாயம் ஆக்கப்படும் எனவும், தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர  போட்டித்தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு, தமிழ் நெஞ்சங்களில் பால்வார்ப்பதுபோல் அமைந்துள்ளது. இதுவரை அரசுப்பணிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்த தமிழக இளைஞர்கள் பலர் இந்த அரசாணையால் அதிகளவில் அரசுப்பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற நாள் முதல் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு மக்களின் மனம் கவர்ந்த முதல்வராகவும், நம்பர் ஒன் முதல்வராகவும் திகழ்கிறார். அவரது அறிவிப்புகளுக்கு எல்லாம் முத்தாய்ப்பாகவும், தாய் மொழியாம் தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையிலும்  இந்த அரசாணை அமைந்துள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ncc-modi-medal-28

    டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

  • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

    ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

  • flag-drones-display-27

    காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

  • trainnnnnjobbb

    ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

  • oil-hair-peru-27

    சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்