SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

எச்சரிக்கையாக இருப்போம்

2021-12-03@ 00:33:28

தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள பி.1.1.529 என்ற புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தாக்கம், மீண்டுமொரு அச்சத்தை மக்களிடையே ஏற்படுத்தி உள்ளது. இந்த வைரஸ்க்கு ‘‘ஒமிக்ரான்’’ என பெயரிடப்பட்டுள்ளது. தென் ஆப்ரிக்கா மட்டுமின்றி இங்கிலாந்து, சிங்கப்பூர், இத்தாலி, ஜெர்மனி, ஹாங்காங், இஸ்ரேல், போட்ஸ்வானா, பிரான்ஸ், பெல்ஜியம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது. வழக்கத்ைத விட மிக அதிக வேகத்தில் பரவும் தன்மையை இந்த வைரஸ் கொண்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. ஒமிக்ரான் வைரஸில் இருந்து பாதுகாத்துக் கொள்ள 2 டோஸ் தடுப்பூசி அவசியமென இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் வலியுறுத்தி உள்ளது. தேவைப்படும்பட்சத்தில் பூஸ்டர் டோஸ் போட்டுக் கொள்வது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. ஆகையால் எந்த வித அச்சமுமின்றி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும்.

தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸ் பரவலை தடுக்கும்விதமாக, திமுக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல்கட்டமாக சென்னை, மதுரை, கோவை உள்ளிட்ட விமான நிலையங்களில் டாக்டர்கள் அடங்கிய குழுவை நியமித்துள்ளது. இக்குழுவினர் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். இவர்கள் முதல் 7 நாட்கள் வீட்டுத்தனிமையில் இருக்க வேண்டும். அதன்பின் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்க வேண்டுமென சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் மீண்டும் ஊரடங்கு, பள்ளி, கல்லூரிகளை மூட உள்ளதாக தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. இதுதொடர்பாக மதுரையில் பேட்டியளித்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தமிழகத்தில் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை என தெரிவித்துள்ளார். அதே நேரம் மக்கள் முறையாக முகக்கவசம் அணிதல், சமூக விலகல், அடிக்கடி கைகளை சோப் போட்டு கழுவுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தொடர வேண்டுமென தமிழக அரசு வலியுறுத்தி உள்ளது.

இந்தியாவிலிருந்து தற்போது குறிப்பிட்ட சில நாடுகளுக்கு மட்டுமே சர்வதேச விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒன்றிய அரசானாது ஒமிக்ரான் பரவி வரும் நாடுகளுக்கு விமான சேவையை உடனடியாக நிறுத்த வேண்டும். கடந்தாண்டு சீனா மற்றும் வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்களை முறையாக தனிமைப்படுத்தி, கொரோனா பரிசோதனை செய்திருந்தால் இந்தளவுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்காது. இனியாவது ஒன்றிய அரசு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். இன்னும் சில மாதங்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுவோம். பயம் தவிர்ப்போம்... விழிப்புணர்வுடன் இருந்து வைரசை விரட்டுவோம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ncc-modi-medal-28

  டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

 • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

  ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

 • flag-drones-display-27

  காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்