ஹைவேவிஸ் பகுதியில் யானைக்கூட்டம் முகாம்: மலைக்கிராம மக்கள் பீதி
2021-12-02@ 14:51:55

சின்னமனூர்: ஹைவேவிஸ், மேகமலை பகுதியில் யானைக்கூட்டம் முகாமிட்டுள்ளதால் மலைக்கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர்.தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே ஹைவேவிஸ் பேரூராட்சியில் உள்ள 7 மலைக்கிராமங்களில் சுமார் 8,500 பேர் வசிக்கின்றனர். இக்கிராமங்களை சுற்றி உள்ள அடர்ந்த வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் வசிக்கின்றன. தற்போது கார்த்திகை மாதத்தையொட்டி, கேரள வனப்பகுதியிலிருந்து யானைகள், ஹைவேவிஸ், மேகமலை மலைக்கிராம பகுதிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளன.
ஹைவேவிஸ் மலைக்கிராமத்தில் தபால் அலுவலம் அருகே நேற்று முன்தினம் 4 யானைகள் குட்டிகளுடன் உலாவியது. இதை அப்பகுதி மக்கள் தங்கள் செல்போனில் படம் பிடித்துள்ளனர். மேலும், அப்பகுதியைச் சேர்ந்த தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டிற்குள்ளே முடங்கி உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை ஐயப்பன் கோயில் சீசனில், யானைக்கூட்டம் வழிமாறி, ஹைவேவிஸ் மலைக்கிராம குடியிருப்பு பகுதிக்குள் நுழைவது வழக்கம். எனவே, சின்னமனூர் வனத்துறையினர் ஹைவேவிஸ் மலைக்கிராமங்களில் முகாமிட்டுள்ள காட்டுயானைகளை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை கோயிலில் திருடப்பட்ட ரூ.12 கோடி மதிப்புள்ள 5 வெண்கல சிலைகள் மீட்பு; 4 பேர் கைது: சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் அதிரடி..!!
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் 2 பிரேத பரிசோதனை முடிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழு செய்த ஆய்வு நிறைவு: இன்று அல்லது நாளை அறிக்கை தாக்கல்..!
உத்திரமேரூர் அருகே அம்மன் கோயில்களில் கூழ்வார்த்தல் திருவிழா; பக்தர்கள் அலகு குத்தி வழிபாடு
மருத்துவான்பாடி கிராமத்தில் அனைத்து வசதிகளுடன் கூடிய விளையாட்டுத்திடல்; கிராம சபை கூட்டத்தில் இளைஞர்கள் கோரிக்கை
வாரணவாசி ஊராட்சியில் கலைஞரின் வெண்கலை சிலை; கிராம சபையில் தீர்மானம்
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!