நரிக்குறவர் குடும்பங்களுக்கு நிவாரண உதவி
2021-12-02@ 00:52:29

பொன்னேரி: பொன்னேரியில் நரிக்குறவர் காலனியில் உள்ள 125 குடும்பங்களுக்கு, பொன்னேரி தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரை.சந்திரசேகர், நிவாரண பொருட்களை வழங்கினார். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால், பொன்னேரி நரிக்குறவர் இருளர் காலனிகள், இந்திராநகர் பகுதியில் வசிக்கும் 125 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
இதையடுத்து, பொன்னேரி காங்கிரஸ் எம்எல்ஏ வழக்கறிஞர் துரைசந்திரசேகர், நேற்று மேற்கண்ட பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். பின்னர் அவர்களுக்கு பாய், தலையணை, பெட்ஷீட், அரிசி, எண்ணெய் உள்பட அத்தியாவசிய நிவாரண பொருட்களை வழங்கினார். அவருடன், பொன்னேரி ஆர்டிஓ செல்வம், விஏஓ சுப்பிரமணி செல்வராகவன், காங்கிரஸ் நிர்வாகிகள் அமரன், கார்த்திகேயன், ஜான்.தியாகராஜன் உள்பட பலர் இருந்தனர்.
மேலும் செய்திகள்
11ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: மாநில அளவில் 95.56% தேர்ச்சியுடன் பெரம்பலூர் மாவட்டம் முதலிடம்..!
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
செங்கல்பட்டு அருகே முகம் சிதைத்து வாலிபர் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
லோக் அதாலத்தில் 5204 வழக்குகளுக்கு தீர்வு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!