SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பெண்களை மதிப்போம்

2021-12-02@ 00:27:51

பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்கள், வன்கொடுமைகள் இந்தியா மட்டுமல்ல, அனைத்து நாடுகளிலும் நடந்து வருகிறது. பெண்களுக்கு பள்ளி, கல்லூரி பணியிடங்களில் பாதுகாப்பு சூழலை ஏற்படுத்திக் கொடுத்தாலும் எப்படியோ பாலியல் சம்பவங்கள் நடந்து விடுகின்றன. ஆஸ்திரேலியாவில் இது போன்ற பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகளால் பிரதமருக்கே நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவின் கூட்டாட்சி நாடாளுமன்றம் அமைந்துள்ள கான்பெராவில் உள்ள ஒரு அமைச்சரின் அலுவலகத்தில் முன்னாள் பெண் ஊழியர் ஒருவரை சக ஊழியர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதை அப்பெண் பகிரங்கப்படுத்தி புகார் அளித்தை தொடர்ந்து பாதிக்கப்பட்ட பல பெண்கள் தொடர்ந்து புகார் கொடுக்க தொடங்கினர்.

இதையடுத்து  அரசு சார்பில் உண்மை கண்டறியும் விசாரணை குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.  அந்நாட்டின் பாலியல் வன்கொடுமை தடுப்பு ஆணையர் கேட் ஜென்கின்ஸ் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை மேற்கொண்டார். நாடாளுமன்ற பணியிடம் பாதுகாப்பாகவும், மரியாதைக்குரியதாகவும் இருப்பதை உறுதி செய்வதே ஆய்வின் நோக்கம். ஆனால், அங்கு குறை இருக்கிறது. பெண் எம்பிக்களின் நிலை ஆபத்தில் இருப்பதாக  குறிப்பிட்டுள்ளார்.  அவர் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில், நாடாளுமன்றத்தில் பணியாற்றும் பெண்களில் மூன்றில் இருவர் பாலியல் தொல்லையை அனுபவித்திருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களிடமும், அமைப்புகளிடமும் இவர் கருத்துகளை கேட்டறிந்தார். இவரது அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போது பெரும் சர்ச்சை வெடித்தது.

அதில், தற்போதுள்ள பெண் எம்.பிக்கள் பலர் பாலியல் கொடுமைக்கு ஆளாகியிருப்பதை பகிரங்கமாக தெரிவித்துள்ளனர். எதிர்பாராத நேரத்தில் திடீரென உதட்டில் முத்தமிடுகின்றனர் என்று அம்பலப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 40 சதவீத பெண்கள் தாங்கள் பாலியல் சீண்டல்களை அனுபவித்ததை பற்றி கூறியுள்ளனர். அனைத்து பெண் ஊழியரும் ஒருமுறையாவது பாலியல் சீண்டலுக்கு ஆளாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த ஆய்வறிக்கை ஆஸ்திரேலிய அரசியலில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

ஆஸ்திரேலியா முழுவதும் பெண்கள் நீதி கோரி போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் பிரதமர் ஸ்காட் மோரிசனுக்கு புதிய  நெருக்கடி  ஏற்பட்டுள்ளது. பூமியை, நாட்டை, நதிகளை பெண்ணாக, தாயாக போற்றும் அதே மனிதர்கள்தான், தாய்மையை, பெண்களை, பெண்மையை இழிவுப்படுத்தும் செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பெண்களை மதித்தால் நாடும், உலகமும் மேன்மை பெறும். ஆனால், முன்னேறிய நாடாக கருதப்படும் நாடுகளில் கூட நடைபெறும் பாலியல் சம்பவங்கள் கற்காலத்தை நோக்கி உலகமே செல்கிறதோ என்ற அச்சத்தை உருவாக்கியுள்ளது.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ncc-modi-medal-28

  டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

 • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

  ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

 • flag-drones-display-27

  காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்