SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

விமான நிலைய புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் அமல்: வெளிநாட்டு பயணிகள் சிக்கிமில் நுழைய தடை: ஒமிக்ரான் அச்சுறுத்தலால் அடுத்தடுத்த நடவடிக்கை

2021-12-01@ 17:18:45

புதுடெல்லி: ஒமிக்ரான் பரவல் அச்சத்தால் நாடு முழுவதும் இன்று முதல் விமான நிலைய புதிய கட்டுபாடுகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், சிக்கிம் மாநிலத்தில் வெளிநாட்டினர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக, நாடு முழுவதும் ஒன்றிய சுகாதாரத் துறையின் சார்பில் புதிய வழிகாட்டல் நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தொற்று பரவல் அதிகம் உள்ள நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் பயணிகள் அனைவரையும் கட்டாய கோவிட் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். அவர்கள் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களை போட்டிருக்க வேண்டும். வெளிநாட்டு பயணிக்கு கோவிட் பாசிட்டிவ் என்று கண்டறியப்பட்டால், அவரை கட்டாயம் தனிமைப்படுத்த வேண்டும். அவரது மாதிரிகள் மரபணு பரிசோதனைக்கு அனுப்ப வேண்டும்.

அனைத்து பயணிகளையும் குறிப்பிட்ட காலத்திற்கு வீட்டு தனிமைப்படுத்தலில் வைத்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இத்தகைய சூழ்நிலையில், மகாராஷ்டிரா, டெல்லி மாநில அரசுகள் ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் விமானங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஒன்றிய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. ஆனால், இதுகுறித்து ஒன்றிய அரசு இன்னும் எவ்வித முடிவும் எடுக்கவில்லை. இதற்கிடையே புதியதாக வெளியிடப்பட்ட வழிகாட்டல் நெறிமுறைகள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஒமிக்ரான் அச்சுறுத்தல் காரணமாகவே வரும் 15ம் தேதி வரை வெளிநாட்டினர் எவரும் சிக்கிம் வருவதற்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

அதில், ‘அனைத்து வெளிநாட்டினருக்கு இன்னர் லைன்  பெர்மிட் ரத்து செய்யப்படுகிறது. அதனால், அவர்கள் சிக்கிம் வர முடியாது. கடுமையான  கட்டுப்பாடுகளை பின்பற்ற விமான நிலையங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’ என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை எந்த மாநிலமும் வெளிநாட்டினருக்கு அந்தந்த மாநிலங்களுக்கு வந்து செல்வதில் எவ்வித தடையையும்  விதிக்கவில்லை. ஆனால் சிக்கிம் மாநிலம் வெளிநாட்டினருக்கு தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

  • rose-shaped-coral-21

    என்ன ஒரு அழகு!!!: டஹிடி தீவின் கடலுக்கு அடியே சுமார் 3 கி.மீ நீளமுள்ள ராட்சத ரோஜா வடிவ பவளப்பாறைகள் கண்டுபிடிப்பு..!!

  • Trichy_Thiruverumbur_Koothappar_Jallikattu

    திருச்சி திருவெறும்பூர் கூத்தப்பர் பகுதி ஜல்லிகட்டு போட்டி: சீறி பாயும் காளைகள்

  • Marinaa

    சென்னை மெரினா கடற்கரை காமராஜர் சாலையில் நேற்று நடைபெற்ற அணிவகுப்பு ஒத்திகை

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்