SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வாழ்க ஜனநாயகம்

2021-12-01@ 00:01:24

இந்திய ஜனநாயகத்தின் மிகப்பெரிய கோயில் நமது நாடாளுமன்றம். அங்கு கொண்டு வரும் ஒவ்வொரு மசோதாக்களும் நமது நாட்டின் வளர்ச்சிக்கு வைரக்கல். அதனால்தான் ஒவ்வொரு மசோதாக்களும் அவையில் தாக்கல் செய்யப்பட்டு நீண்ட விவாதம் நடத்தப்பட்டு, பல்வேறு தரப்பு எம்பிக்களின் கருத்துக்களையும் கேட்டு திருத்தம் செய்து அதன்பின் நிறைவேற்றி ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டு சட்டமாக்கப்படும். ஆனால் இப்போது அத்தனை நடைமுறைகளும் சரிக்கப்பட்டு வருகிறது. மாநிலங்களவையின் மையப்பகுதிக்கு வந்து மாண்பை குலைக்கும் வகையில் செயல்பட்டதாக 12 எம்பிக்களை கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டு இருக்கிறார் மாநிலங்களவை தலைவர். அதே சமயம் முதல் நாள் நாடாளுமன்றத்திற்கு வந்த பிரதமர் மோடி, ‘எந்த பிரச்னை குறித்தும் விவாதம் நடத்த தயார்’ என்று கூறிவிட்டு வேளாண் சட்ட வாபஸ் மசோதாவை எந்தவித விவாதமும் இல்லாமல் இரு அவைகளிலும் நிறைவேற்றி விட்டனர்.

நாடாளுமன்றத்தில் விரிவான விவாதம் நடத்த மோடி அரசு விடுவதில்லை என்று எதிர்க்கட்சிகள் தொடர்ந்து புகார் தெரிவித்து வருகின்றன. பிரதமர் மோடி இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இதுவரை 6 நாடாளுமன்ற தொடர்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் மொத்தம் 42 மசோதாக்கள் வெறும் 30 நிமிடத்திலும், 19 மசோதாக்கள் 10 நிமிடத்திலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. கடந்த தொடரில் கூட 15 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் 14 மசோதாக்கள் மக்களவையிலும், ஒரு மசோதா மாநிலங்களவையிலும் வெறும் 10 நிமிடத்திற்குள் நிறைவேற்றப்பட்டன. இதுதவிர 26 மசோதாக்கள் வெறும் அரை மணி நேரத்திற்குள் நிறைவேற்றப்பட்டன. மழைக்கால கூட்டத்தொடரில் 10 நிமிடங்களுக்குள் நிறைவேற்றப்பட்ட 14 மசோதாக்களில் விரிவான விவாதம் நடத்த வேண்டிய பொதுகாப்பீடு திருத்த மசோதாவும் அடங்கும். வங்கி மோசடி மற்றும் திவால் திருத்த மசோதா 5 நிமிடத்திலும் தீர்ப்பாய சீர்திருத்த மசோதா 9 நிமிடத்திலும், வரிவிதிப்பு சட்டம் தொடர்பான மசோதா 6 நிமிடத்திலும் நிறைவேற்றப்பட்டன.

பொதுகாப்பீடு மசோதாவை நிலைக்குழுவுக்கு அனுப்ப எதிர்க்கட்சிகள் விரும்பின. ஆனால் 22 நிமிடங்களில் மசோதா நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு விட்டது. மக்களுக்கு தேவையான அதிமுக்கியம் வாய்ந்த மசோதாக்கள் கூட எந்தவித விவாதம் இல்லாமல் அப்படியே நிறைவேற்றப்பட்டு விடுகின்றன. சில மசோதாக்களை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையில் கூட நீண்ட விவாதம் நாடாளுமன்றத்தில் இல்லை என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தனது கவலையை வெளிப்படுத்தி இருந்தது. இந்த தொடராவது நல்ல ஆரோக்கியமான விவாதம் நடத்தக்கூடிய வகையில் அமையுமா என்று எதிர்பார்த்தால், 12 எம்பிக்கள் சஸ்பெண்ட் முற்றிலும் புரட்டிப்போட்டுவிட்டது. அனைத்து எதிர்க்கட்சிகள் தரப்பிலும் வேண்டுகோள் வைத்தும் சஸ்பெண்ட் நீக்கப்படவில்லை. 12 எம்பிக்கள் மன்னிப்பை கேட்கிறது ஆளும் தரப்பு. இனி அவையை நடத்த எதிர்க்கட்சிகள் விடவில்லை என்று பழிபோட்டு விடலாம். வாழ்க ஜனநாயகம்.

Like Us on Facebook Dinkaran Daily News
 • ncc-modi-medal-28

  டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

 • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

  ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

 • flag-drones-display-27

  காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்