SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பவானிசாகர் அருகே புதரில் சிக்கி தவித்த கரடி மீட்பு

2021-11-30@ 13:01:43

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான கரடிகள் வசிக்கின்றன. இந்நிலையில், பவானிசாகர் வனச்சரகம் புதுப்பீர்கடவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய கரடி அப்பகுதியிலுள்ள தனியார் காகித ஆலை அருகே பட்டா நிலத்தில் சுற்றித் திரிந்த போது அங்குள்ள ஒரு முட்புதரில் இருந்த கம்பியில் சிக்கி அதில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தது.

இதைக் கண்ட அப்பகுதியில் ஆடு, மாடு மேய்க்கும் தொழிலாளர்கள் உடனடியாக பவானிசாகர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் கிருபாசங்கர் தலைமையில் பவானிசாகர் வனச்சரக அலுவலர் சிவக்குமார் மற்றும் வனத்துறை ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் அசோகன் புதரில் சிக்கித் தவித்த கரடிக்கு மயக்க ஊசி செலுத்தியதை தொடர்ந்து வனத்துறை ஊழியர்கள் புதரில் கம்பியில் சிக்கிய கரடியை மீட்டு வாகனத்தில் ஏற்றி அடர்ந்த வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். கரடி புதரில் சிக்கி தவித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Like Us on Facebook Dinkaran Daily News
  • ncc-modi-medal-28

    டெல்லியில் என்.சி.சி. மாணவர்கள் அணிவகுப்பு நிகழ்ச்சி!: பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு..சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பதக்கம் வழங்கினார்..!!

  • Srirangam_Temple_Elephant_Andal_Lakshmi

    ஸ்ரீரங்கம் கோவில் யானைகள் நடை பயிற்சிக்கான நீள பாதை மற்றும் குளியல் தொட்டி பயன்பாட்டிற்கு வந்தது: கும்மாளம் போடும் ஆண்டாள் மற்றும் லெட்சுமி

  • flag-drones-display-27

    காந்தியடிகள்..இந்திய வரைபடம்..தேசிய கொடியின் வடிவம்!: ஆயிரம் டிரோன்கள் மூலம் வானில் நிகழ்த்தப்பட்ட வர்ணஜாலம்..!!

  • trainnnnnjobbb

    ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

  • oil-hair-peru-27

    சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்