சேதமடைந்த பள்ளி கட்டிடம் இடிக்க நோட்டீஸ்: அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தகவல்
2021-11-30@ 00:09:53

திருச்சி: தமிழகம் முழுவதும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடிக்க நோட்டீஸ் அனுப்பப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார். திருச்சி கொட்டப்பட்டு இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் 469 குடும்பங்களுக்கு அரசு சார்பில் பாத்திரம், உடைகள், இலவச காஸ் சிலிண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
பின்னர் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி அளித்த பேட்டி: 2015க்கு பிறகு தமிழகத்தில் தற்போது பெரிய அளவு மழை பெய்துள்ளது. இந்த மழையினால் தண்ணீர் தேங்கியுள்ள பள்ளிகளை கணக்கெடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மிகவும் சேதமடைந்த பள்ளி கட்டிடங்களை இடித்து அகற்றுவதற்கும் பொதுப்பணித்துறை அமைச்சகத்திடமிருந்து விவரம் கேட்கப்பட்டுள்ளது. அவற்றை இடிக்க நோட்டீஸ் தரப்படும். மேலும் சேதமடைந்துள்ள நிலையில் உள்ள பள்ளிக்கட்டிடங்களில் மாணவ, மாணவிகள் அமர்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் செய்திகள்
கடந்த ஒன்றரை ஆண்டில் குமரியில் விபத்தில் 199 சிறுவர்கள் பலி: 2,128 பேர் படுகாயம்
பரமக்குடி நாற்றாங்கால் பண்ணையில் 20 லட்சம் மரக்கன்றுகளை மாவட்டத்துக்கு வழங்கி சாதனை
சேலம் அருகே தனியார் பள்ளி வாகனம் மோதி ஒன்றரை வயது குழந்தை பலி
அவசரம் என்றாலும்... அடக்கியே தீரவேண்டும் எந்த ரயில் இன்ஜினிலும் ‘அந்த’ வசதி இல்லை: இதிலும் புறக்கணிக்கப்படுகிறதா தெற்கு?
பயன்பாடு இல்லாத அரசு பள்ளி கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும்: பொதுமக்கள் வேண்டுகோள்
பட்டுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி வழியாக சென்னைக்கு அதிக ரயில்களை இயக்க வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை
மாமல்லபுரத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பட்டத் திருவிழா..!!
போலந்தில் நதிநீர் மாசுபாட்டால் டன் கணக்கில் செத்து மிதக்கும் மீன்கள்..!!
கென்யாவின் அதிபராக வெற்றி பெற்றார் ரூட்டோ..
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!