SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

பிரிக்ஸ் திரைப்பட விழாவில் தனுசுக்கு விருது

2021-11-30@ 00:08:54

சென்னை: கோவாவில் நடந்த பிரிக்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருது தனுசுக்கு வழங்கப்பட்டது. கோவாவில் நடந்து வந்த 52வது இந்திய சர்வதேச திரைப்பட விழா நேற்று முன்தினம் முடிவைடைந்தது. இந்த விழாவுடன் முதன்முறையாக பிரிக்ஸ் 6வது திரைப்பட விழாவும் நடைபெற்றது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளின் படங்கள் திரையிடப்பட்டன. இந்த விழாவில் இந்தியா சார்பில் போட்டியிட்ட அசுரன் படத்துக்காக தனுஷுக்குச் சிறந்த நடிகருக்கான விருது வழங்கப்பட்டது. இதே படத்திற்காக தனுஷ் தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது. இது தவிர இந்திய தேசிய திரைப்பட விழாவில் ரிங் வாண்டரிங் என்கிற ஜப்பானிய திரைப்படம் சிறந்த படமாகவும், மராட்டிய நடிகரான ஜிதேந்திரா பிகுலால் சிறந்த நடிகராகவும், சிறந்த நடிகைகளாக ஜப்பானிய நடிகை ஏஞ்சலினா மோலினாவும், பிரேசில் நடிகை ரெனாட்டாவும் பெற்றனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • Avanyapuram

    அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

  • Jallikkattu

    ஜல்லிக்கட்டு போட்டி: சீறிப் பாய்ந்து வரும் காளையை அடக்க முயன்ற வீரர்கள்

  • Bogi_Festival_People_Celebrate

    போகி பண்டிகையையொட்டி பழைய பொருட்களை தீயிட்டு மக்கள் கொண்டாட்டம்

  • simla-snow-11

    உறையும் பனி...வெண்பனி போர்வையுடன் காட்சியளிக்கும் சிம்லா: குளுகுளு புகைப்படங்கள்

  • pig-heart-human-11

    உலகில் முதன்முறையாக பன்றியின் இதயத்தை மனிதனுக்கு பொருத்தி மருத்துவர்கள் சாதனை..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்