ஒமிக்ரான் உருமாற்றம் கண்டறியும் ஆய்வு 12 ஆய்வகங்களுக்கு அனுமதி
2021-11-30@ 00:02:06

சென்னை: தமிழகத்தில் ஒமிக்ரான் வைரஸின் சாத்தியக்கூறுகள் உள்ளனவா என்பதை கண்டறிய சிறப்பு ஆர்.டி.பி.சி.ஆர் ஆய்வுகளை மேற்கொள்ள 12 ஆய்கவங்களுக்கு பொது சுகாதாரத்துறை அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக இயக்குனர் செல்வ விநாயகம் அனைத்து சுகாதார அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். சென்னை, கோவை, திருச்சி, சேலம், மதுரை, துாத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளில் 12 ஆய்வகங்களில் ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. தெர்மோ டெக்பாத் நவீன கருவி மூலம் பரிசோதிக்க வேண்டும். கொரோனா வைரஸில் உருமாற்றம் ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருந்தால், அவற்றை, தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் உள்ள மாநில மரபணு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். அங்கு 7 நாட்களில் ஒமிக்ரான் போன்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது உறுதிப்படுத்தப்படும் என சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:
Omigron Transformation Study 12 Laboratory Permission ஒமிக்ரான் உருமாற்றம் ஆய்வு 12 ஆய்வக அனுமதிமேலும் செய்திகள்
சென்னையில் இன்று முகக்கவசம் அணியாத 233 நபர்களுக்கு ரூ.1,16,500 அபராதம்: மாநகராட்சி நடவடிக்கை..!
சிட்லப்பாக்கம் ஏரி ஆக்கிரமிப்பு அகற்ற வந்த அதிகாரிகளை கண்டித்து திடீர் சாலை மறியல்: தாம்பரம் அருகே பரபரப்பு
தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 2,758 பேருக்கு கொரோனா: சுகாதாரத்துறை அறிக்கை..!
தற்காலிக ஆசிரியர் பணிக்கு 24 மாவட்டங்களில் 1.5 லட்சம் பேர் விண்ணப்பம்; பள்ளிக்கல்வித்துறை தகவல்
போட்டோவுக்கு வித, விதமாக போஸ் கொடுத்து திருவிக. நகர் போலீஸ் ஸ்டேஷனில்; ரவுசு காட்டிய போதை இளைஞர்கள்
மாமல்லபுரம், கல்பாக்கத்தில் உயர் ரக பைக் திருடிய 3 பேர் கைது
ஆச்சரியம்..!: அமெரிக்காவில் விசித்திரமாக பச்சை நிறத்தில் தோன்றிய வானம்..!!
கிழக்கு உக்ரைனில் தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தும் ரஷ்யப்படை... ஒரேநாளில் 12 பேர் பலியான சோகம்
சோமாலியாவில் தலைவிரித்தாடும் உணவு பஞ்சம்.. பசி பட்டினியுடன் மக்கள்!!
ஹாட் டாக் பன் சாப்பிடும் போட்டி : 10 நிமிடங்களில் 63 பன்கள் சாப்பிட்டு ஜோய் செஸ்ட்நட் என்பவர் சாம்பியன்..!
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..