எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது : பிரதமர் மோடி உறுதி
2021-11-29@ 11:00:31

புதுடெல்லி: பரபரப்பான அரசியல் சூழலில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் நாளிலேயே வேளாண் சட்டங்கள் ரத்து மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, 26 முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற அரசு முடிவு செய்துள்ளது. அதே சமயம் பெகாசஸ் விவகாரம், விலைவாசி உயர்வு, விவசாயிகளின் எஞ்சிய கோரிக்கைகள் வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அரசுக்கு கடும் நெருக்கடி தர முடிவு செய்துள்ளன.இந்த நிலையில், குளிர்கால கூட்டத் தொடரை ஒட்டி நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி அளித்துள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், 'மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தொடர் இது.இந்தியா 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் போது தற்போதைய கூட்டத் தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.75வது ஆண்டு சுதந்திர கொண்டாட்டத்தை ஒட்டி பல்வேறு விழாக்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்.
நாடாளுமன்றத்தில் அனைத்து விவகாரங்கள் தொடர்பாக விரிவான விவாதங்களுக்கு மத்திய அரசு தயாராக உள்ளது. எதிர்க்கட்சிகளின் அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளிக்க அரசு தயாராக உள்ளது.வளர்ச்சி குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும் என்பது மக்கள் விருப்பம்.சபாநாயகர் மாண்பும் அவையின் மாண்பும் காப்பற்றப்படும் என நம்புகிறேன்.அவையை யாரும் அவமதிக்கக் கூடாது. அமைதியான முறையில் விவாதங்கள் நடைபெற வேண்டும் என கோரிக்கை விடுகிறேன்.உருமாறிய புதிய வகை கொரோனா தொடர்பாக நாம் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்,'என்றார்.
Tags:
குளிர்கால கூட்டத் தொடர்மேலும் செய்திகள்
இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் பாதிப்பு 17,073 ஆக பதிவு... 24 மணி நேரத்தில் 21 பேர் பலி!!
ஜனாதிபதி தேர்தல்... இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!
அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி வருமான வரித்துறையில் ரூ.1.39 கோடி கையாடல்
அசாமில் இப்படியும் ஒரு ஆபத்து காண்டாமிருகங்களுக்கு எமனாகும் களைகள்: உணவை நஞ்சாக்கி உயிரை பறிக்கும்
ஆன்லைனில் இன்று டிக்கெட் வெளியீடு திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கலில் பக்தர்கள் தேர்வு
செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எப்ஐஆரில் உள்ள தகவலை சரிபார்ப்பது கட்டாயமில்லை: நாக்பூர் நீதிமன்றம் அதிரடி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!