SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

75 லகரம் இருந்தா தான் கவுன்சிலர் சீட்டு என கறார் காட்டும் மாஜி மந்திரியை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

2021-11-29@ 01:25:45

‘‘நகர்ப்புற  உள்ளாட்சி தேர்தல் வேலையெல்லாம் படுவேகமா நடக்குதே.. ஏதும் விஷயமிருக்கா..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.
‘‘இருக்கே...  மதுரை மாநகராட்சியில் மொத்தம் 100 வார்டுகள் உள்ளன. அதிமுக சார்பில் மாநகர் மாவட்டம் சார்பில் கட்சியினரிடம் விருப்ப மனுக்கள் கடந்த 3 நாட்களாக பெறப்பட்டது. மதுரையைச் சேர்ந்த வட்டக்கிளை நிர்வாகிகள், விருப்ப மனு தாக்கல் செய்வதற்காக, தெர்மகோலை சுற்றி வருகிறார்கள். விருப்ப மனு தாக்கல் செய்யும்போது, தெர்மகோலிடம் தங்கள் செல்வாக்கை காட்டுவதற்காக, கூலிக்கு 50 முதல் 100 பேர் வரை பிடித்து, அவர்களை வாகனத்தில் ஏற்றி, கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வந்து, தெர்மகோல் முன் நிறுத்துகிறார்களாம். அழைத்து வரப்படுபவர்களில் பெண்களுக்கு ரூ.200, ஆண்களுக்கு ரூ.300 என விநியோகம் செய்யப்பட்டதாம். ஆனால், தெர்மகோல் அதற்கெல்லாம் அசைகிற மாதிரி இல்லையாம். கவுன்சிலர் சீட் கேட்டு வருகிறவர்களிடம் ‘‘ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரை செலவு செய்யணும். உன்னால முடியுமா? யாரால செலவு பண்ண முடியுமோ அவங்களுக்குத்தான் சீட்டு’’ என்று கறாராக கூறிவிட்டராம். இதனால், சீட் பெறலாம் என கனவுடன், கூலிக்கு ஆள் பிடித்து வந்த கட்சி நிர்வாகிகள், கொந்தளிப்பில் இருக்கிறார்களாம். பணம் படைத்தவர்களுக்குத்தான் கட்சியா, சீட்டா என கட்சியின் மேலிடத்திற்கு புகார் மேல் புகார் பறக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கஞ்சா பெண் வியாபாரியிடம்  ஸ்பெஷல் டீம் நடத்தும் விசாரணையால் கிலியில் இருக்கிறார்களாமே சில காக்கி  அதிகாரிகள்’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.
‘‘மன்னர்  மாவட்டத்தில்  கஞ்சா விற்பனையில் பெண் வியாபாரி கொடி கட்டி பறப்பதால்  அதற்கு  முற்றுப்புள்ளி வைக்க சில தினங்களுக்கு முன் உயரதிகாரி தலைமையில்  உள்ள  காக்கி ஸ்பெஷல் டீம், அந்த பெண் வியாபாரி உள்பட 3 பேரை பிடித்து ரகசிய   விசாரணை மேற்கொண்டதாம்... இந்த விசாரணையின் போது பெண் கஞ்சா   வியாபாரியுடன், மாவட்டத்தில் முக்கிய காக்கி அதிகாரிகள் சிலர் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை   மேற்கொண்டபோது இரண்டு இன்ஸ் மட்டும் 40 முறையும்... எஸ்ஐ 96 முறையும்...    பெண் வியாபாரியிடம் தொடர்ந்து போனில் உரையாடி வந்தது தெரிய வந்ததாம்...   இதில் அதிர்ச்சிக்குள்ளான ஸ்பெஷல் டீம், பெண் கஞ்சா வியாபாரிக்கும்... இந்த காக்கி அதிகாரிகளுக்கும் என்ன தொடர்பு என களத்தில் இறங்கியதாம்..

மன்னர்  மாவட்டத்தில் கடந்த ஆட்சியில் பணியாற்றி வரக்கூடிய இந்த அதிகாரிகள்  வேறு  எந்த மாவட்டத்துக்கும் மாற்றலாகி செல்லாமல் பல ஆண்டுகளாக இந்த   மாவட்டத்திலேயே பணியற்றி வருகிறார்களாம். மாதம்தோறும் அதிகாரிகளை தேடி   கரன்சி வந்து விடுவதால் பெண் வியாபாரி மீது கேஸ் ஏதும் போடாமல் கஞ்சா   விற்பனைக்கு ரகசியமாக அனுமதித்து வந்துள்ளனர்.மாதம்தோறும் கரன்சியில்   ருசி பார்த்த அதிகாரிகள் வேறு மாவட்டத்துக்கு மாற்றுதலாகி செல்ல விருப்பம்   இல்லாமல் இருந்து வந்தது ரகசிய விசாரணையில் தெரிய வந்தது... இதுதொடர்பாக   உயரதிகாரிக்கு ஸ்பெஷல் டீம் ஆதாரத்துடன் ரிப்போர்ட்டும் கொடுத்து   விட்டதாம்.. இந்த விவகாரம் தற்போது வெளியில் கொஞ்ச கொஞ்சமாக கசிய   தொடங்கியதாம்... இதனால் கஞ்சா பெண் வியாபாரியிடம் ெதாடர்பில் உள்ள   அதிகாரிகள் கிலியில் இருக்கிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘வெயிலூர் மாவட்ட விவகாரம் என்ன...’’
‘‘இந்த  மாவட்டத்து காட்டுப்பாடி சப்  டிவிஷன்ல, பொன்னான ஆறு கொண்ட காவல்நிலையம்  இருக்கிறது. இந்த  காவல்நிலையத்துல, 3 ஸ்டார் பெண் காக்கி பணிபுரிஞ்சி  வர்றாங்க. தமிழகத்தோட  பார்டர்ல, இந்த காவல்நிலையம் இருக்குறதால,  ஆந்திராவுல இருந்து மழை  வெள்ளமும் நல்லா, வருதாம், பண வெள்ளமும் நல்லா வருதாம். அதுக்கு காரணம், ஆந்திராவுல இருந்துதான், அதிகளவில்  தமிழகத்துக்கு கிராணைட் கற்களை  ஏற்றிகிட்டு லாரிகள் வருது. மாசத்துக்கு 25  லாரிகள் வரைக்கும் பொன்னான  ஏரியா பக்கமாக வருதாம். இதுல, ஒரு லாரிக்கு  ரூ.15 ஆயிரம்னு ரேட் பிக்ஸ்  செஞ்சி, சம்திங் வசூல் செய்றாங்களாம், அந்த பெண்  காக்கி. அதுமட்டுமில்லாம,  ஸ்டேஷன்ல என்னை பார்த்தியா, நேரா போய்கிட்டே  இருக்கணும், யாருகிட்டயும்  எதுவும் பேசக்கூடாதுன்னு, பண வெள்ளத்துல இவங்க  மட்டும் மெதக்குறாங்களாம்.  

அதுமட்டுமில்ல,  நைட் ரவுண்ட்சும் போறதே  இல்லையாம், வீட்டுல இருந்துகிட்டே, நான் அங்க  இருக்கேன், இங்க  இருக்கேன்னு, சொல்லி ஏமாத்துறாங்களாம். குற்ற சம்பவங்கள்  ஏதாவது  நடந்துச்சுன்னா, ரெண்டு தரப்பையும் பேசி பஞ்சாயத்து செஞ்சி,  அதுலயும்  சம்திங் பார்க்குறாங்களாம். இப்படி எந்தெந்த வழியில சம்திங் வாங்க   முடியுமோ, எல்லா வழிகளையும் விடாம, சம்திங் வாங்குறாங்களாம். அதோட,  ஸ்டேஷன்ல யாரையுமே மதிக்கிறதில்லையாம். காக்கிகளையும்,  ஒருமையிலத்தான்  பேசுறாங்களாம். இதனால ஒரு காக்கி டிரான்ஸ்பர் கேட்டு, உயர்  காக்கிகிட்ட  கண்ணீரே சிந்தியிருக்காராம். இப்படி 3 ஸ்டார் காக்கியின்  ஆட்டம்,  கொஞ்சநெஞ்சம் இல்லையாம். ஏற்கனவே, பள்ளி கொண்ட ஏரியாவுல, ஆடிய   ஆட்டத்துக்குத்தான், இங்கு மாத்துனாங்களாம். இப்ப இங்க, அதைவிட ரொம்ப ஓவரா   ஆடுறாங்களாம். இந்த ஆட்டத்துக்கு முடிவே இல்லையான்னு சக காக்கிங்க  புலம்பல்  சத்தம் காத கிழிக்குது’’ என்றார் விக்கியானந்தா. 

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

 • Republic Day Chennai

  சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்