SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

2 பிள்ளைகளை தவிக்க விட்டு க.காதலனுடன் தொழிலதிபர் மனைவி மீண்டும் ஓட்டம்: குமரியில் பரபரப்பு

2021-11-28@ 14:46:48

மார்த்தாண்டம்: கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தை அடுத்த கொடுங்குளம் கனியன்விளை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (41). பழைய கார்கள் வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். அவரது மனைவி சோனியாகாந்தி (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 20ம் தேதி இரவு வீட்டில் இருந்த சோனியா காந்தி, அவரது மகள் ஆகிய 2 பேரையும் காணவில்லை. இதேபோல் வீட்டில் இருந்த சொகுசு கார், பீரோவில் வைத்திருந்த 45 பவுன் நகை, ரூ.13 லட்சம் ஆகியவையும் மாயமாகி இருந்தது.

இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் விசாரணை நடத்தினர். சுமார் 2 மாதங்களை கடந்த நிலையிலும் மாயமான தாய், மகள் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லை. தொடர்ந்து மனைவி, மகளை கண்டுபிடித்து தருமாறு மோகன்ராஜ் மதுரை கோர்ட்டில் ஹேபியர் கார்பஸ் மனு தாக்கல் செய்தார். இதையடுத்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது கேரளாவில் காதலனுடன் சோனியா காந்தி இருப்பதாக தகவல் கிடைத்தது. பின்னர் கோவாவில் இருப்பதாக கிடைத்து விரைந்து சென்றார்கள்.

ஆனால் எந்த தகவலும் கிடைக்காமல் திரும்பி வந்தனர். இதற்கிடையே டெல்லியில் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதைத் தொடர்ந்து சுமார் 68 நாட்களுக்கு பிறகு, கள்ளக்காதலடன் சோனியா காந்தி, அவரது மகள் ஆகியோரை பிடித்து வந்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணைக்கு பிறகு கணவருடன் சோனியா காந்தி செல்வதாக கூறினார். அதன்படி கணவர் மோகன்ராஜ் உடன் சோனியா காந்தியை போலீசார் அனுப்பி வைத்தனர்.

ஒரு மாதத்துக்கு மேல் கணவர், பிள்ளைகளுடன் இருந்த சோனியா காந்திக்கு செல்போன் எதுவும் கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதற்கிடையே நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று பிள்ளைகளை அழைத்து வருவதாக கணவரிடம் கூறி உள்ளார். அவரும் சம்மதம் தெரிவித்து உள்ளார். உடனே பக்கத்து வீட்டில் போன் வாங்கி கள்ளக்காதலனை வந்து அழைத்து செல்லுமாறு கூறி உள்ளார். குறிப்பிட்ட இடத்தில் கள்ளக்காதலன் மனோஜ் தயார் நிலையில் இருந்துள்ளார். உடனே சோனியா காந்தி அவரது புல்லட்டில் ஏறி பறந்து விட்டாராம்.

இதையடுத்து மோகன்ராஜ் மீண்டும் காவல் நிலையம் சென்று புகார் அளித்தார். தனது மனைவி 2 பிள்ளைகளையும் தவிக்க விட்டு விட்டு சென்று விட்டாள். 12 பவுன் தாலி செயின், ரூ.10 ஆயிரத்துடன் அவளை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகவே மனைவியை கண்டுபிடித்து தர வேண்டும் என்று அழுது புலம்பி உள்ளார். போலீசார் அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்துள்ளனர்.

போலீசில் புலம்பல்
மோகன்ராஜியின் நிறுவனத்தில் வேலை பார்த்தவர் தான் மனோஜ். அன்பாக பழகி மனைவியை அபகரித்து சென்று விட்டார். அவரது பிடியில் இருந்த மனைவியை ரூ.10 லட்சம் செலவு செய்து மீட்டு வந்தேன். 2 மாதம் கூட ஆகவில்லை. மீண்டும் மனோஜ் அழைத்து சென்று விட்டார். ஆகவே அவரிடம் இருந்து மனைவியை மீட்டு தாருங்கள் என்று மோகன்ராஜ் காவல் நிலையத்தில் அழுது புலம்பியுள்ளார்.

மேலும் செய்திகள்

LikeGamezop
Like Us on Facebook Dinkaran Daily News
 • ragul-inde-15

  டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!

 • independence-15

  75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!

 • inde-12

  நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!

 • drugs-11

  போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!

 • cuba-fire-accident

  கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்