வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் பரபரப்பு: ஆடுடன் வந்து புகார் அளித்த பெண் சாமியார்
2021-11-28@ 12:06:33

வேலூர்: வேலூர் சலவன்பேட்டை அம்மணாங்குட்டை ரோட்டை சேர்ந்தவர் இந்திரா(50). பெண் சாமியாரான இவர், அங்காளம்மன் கோயிலில் குறி சொல்லி வருகிறார். இந்நிலையில் இந்திரா நேற்று காலை தனது ஆடுடன் வேலூர் தெற்கு போலீஸ் நிலையத்திற்கு வந்து புகார் அளித்தார். அதில், ‘எனது எதிர் வீட்டை சேர்ந்த குணா, அவரது மகள் லட்சுமி ஆகியோர் இரவு நேரங்களில் எனது வீட்டின் மீது கற்களை வீசுகின்றனர்.
வீட்டுக்கு வெளியே கட்டியுள்ள ஆட்டை அடித்து துன்புறுத்துகின்றனர். நேற்று முன்தினம் இரவு கூட ஆட்டை குணா தாக்கியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட என்னை தாய், மகள் இருவரும் சேர்ந்து தாக்கினர். என் மீதும் ஆட்டை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என தெரிவித்தார். பெண் சாமியார் ஒருவர் ஆடுடன் வந்து போலீசில் புகார் அளித்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் செய்திகள்
விவசாய பயன்பாட்டிற்கு 1022 மெட்ரிக் டன் உரங்கள் பழநிக்கு ரயில் மூலம் வருகை
கான்கிரீட் மேற்கூரை சேதமடைந்து இடியும் அபாயம் அரசு மாணவர் விடுதிக்கு புதிய கட்டிடம் : மாணவர்கள் கோரிக்கை
10 வருடங்களாக கண்டுகொள்ளாத அதிமுக அரசு நாயோடை நீர்தேக்கத்தை தூர்வார வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை
அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளாக பராமரிப்பில்லை சிதலமடைந்து கிடக்கும் நவீன ஆடுவதை கூடம்: சீரமைக்க கோரிக்கை
புதுப்பொலிவுடன் செயல்படும் உழவர் சந்தைகள் 250 மெட்ரிக் டன் காய்கறி, பழங்கள் தினசரி விற்பனை : 60 ஆயிரம் நுகர்வோர் பயன்பெறுகின்றனர்
பிளவக்கல் அணைக்கு செல்லும் வழியில் உள்ள கால்வாய் பாலத்தில் விழுந்தது ஓட்டை: சரிசெய்ய வாகன ஓட்டிகள் கோரிக்கை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!