SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தலைமை செயலர் பற்றி உள்துறைக்கு போட்டுக்கொடுத்த புல்லட்சாமி குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2021-11-28@ 01:21:41

‘‘புதுச்சேரியில் தேஜ கூட்டணி அரசு பொறுப்பேற்றதும், மக்களுக்கு நல்லது நடக்கும் என அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது. புல்லட்சாமியும் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். குறிப்பாக தீபாவளிக்கு  10 கிலோ அரிசி, 2 கிலோ சர்க்கரை வழங்கப்படும் என்றார். மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அனைத்து ரேஷன் கார்டுகளுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம், குறைந்தபட்சம் தினக்கூலி ஊழியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் வழங்கப்படும் என தூள் கிளப்பினார். கூட்டணி அரசு  என்பதால் துணை நிலை ஆளுநரும், புல்லட்சாமியின்  அறிவிப்புகளுக்கு தடை போடவில்லை.
ஆனால் தலைமை செயலர் ரூபத்தில் முட்டுக்கட்டை தொடர்கிறது. அறிவிப்புகளை வாரி விட்டால் போதுமா.. எங்கே இருக்கிறது நிதி என கொக்கி போட்டு  புல்லட்சாமி அனுப்பிய கோப்புகளை முடக்கி வைத்திருக்கிறாராம்.
வெகுண்டெழுந்த என்.ஆர்.காங்கிரஸ், பாஜ, சுயேச்சை, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் தலைமை செயலகத்தை முற்றுகையிட்டனர். ஆளும் கட்சியின் எம்எல்ஏக்களே போராட்டம் நடத்தியது சலசலப்பை ஏற்படுத்தியது.  இதற்கிடையே தலைமை செயலரை மாற்றுவார்கள் என காத்திருந்த புல்லட்சாமிக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியது. இதனால் கடுப்பான அவர், தலைமை செயலர் குமாரையும், மாவட்ட ஆட்சியர் கார்க்கையும் மாற்ற வேண்டுமென உள்துறை அமைச்சர் அமித்ஷா, உள்துறை செயலர், பிரதமர் அலுவலக கேபினட் செயலருக்கு கடிதத்தை எழுதியிருக்கிறார். அதில் காரணமில்லாமல் நலத்திட்டத்தை முடக்கும் குமாரின் செயல்பாடுகளை பட்டியலிட்டு கூறியிருக்கிறாராம். இவர் இப்படியே இருந்தால், தேஜ கூட்டணி அரசுக்கு கெட்டப்பெயர்தான் ஏற்படுமென பர்சனலாக சிலருக்கும் கடிதத்தை பறக்க விட்டுள்ளாராம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ரோந்து இல்லாததால, கிரைம் ரேட் அதிகரிச்சதா சொல்றாங்களே...’’ என்று கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘ஆமா.. குயின்பேட்டை மாவட்டத்துல தான். இங்க திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரிச்சுகிட்டே இருக்குது. இதுக்கு முன்னாடி, குற்ற சம்பவங்களை தடுக்க, இரவு ரோந்து பணியில காக்கிங்க ஈடுபடுவாங்களாம். 2  பேர் கொண்ட ரோந்து பைக், பேட்ரோல் வாகனம் மூலமாக ரோந்து போவாங்களாம். ஆனா, குயின்பேட்டை மாவட்டத்துல, இப்ப எந்த ரோந்தும் நடக்குறதில்லையாம். இதனால, குற்றவாளிகள் எந்த தடையும் இல்லாம, திருட்டு உள்ளிட்ட  குற்றசம்பவங்கள்ல ஈடுபட்டு வர்றதாக புகார்கள் எழுந்திருக்குது. இதனால கிரைம் ரேட்டும் தானாக அதிகரிச்சு வருதாம். எனவே, இனியாவது, குயின்பேட்டை மாவட்டத்துல, காக்கிகள் ரோந்து பணியை அதிகரிக்கணும், இரவு நேரங்கள்ல  சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிகிற நபர்களை பிடிச்சு விசாரிச்சு, முழு விவரங்களையும் சேகரிக்கணும்னு, அதோட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கணும்னு மக்கள் கோரிக்கை வெச்சிருக்காங்க’’ என்றார் விக்கியானந்தா.
‘‘உள்ளாட்சி ஜூரம் எப்பிடி இருக்கு..’’
‘‘நாகர்கோவில் மாநகராட்சி நகராட்சியாக இருந்தபோதே தேசிய கட்சிகள்  சார்பாக புதிய முகங்கள் களம் இறங்க இருந்தனர். இதற்காக கடந்த 4 ஆண்டுகள் முன்பு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டபோது, வாக்
காளர்களை கவர சுவீட் பாக்ஸ்கள், இளைஞர்களை கவர கிரிக்கெட் மட்டைகளும், மது பிரியர்களை கவர மதுபாட்டில்கள் என செலவு செய்தனர்.
தேர்தல் தள்ளிப் போகவே, பல லட்சங்கள் செலவு செய்து நொந்து போயினர். எனினும் ஏரியா மக்களுக்கு தீபாவளிக்கு சுவீட் பாக்ஸ்கள் கொடுத்தனர். தேர்தல் தள்ளிப் போய் வருவதால், கடந்த தீபாவளிக்கு சுவீட் பாக்ஸ் வழங்கவில்லை. இந்நிலையில், கட்சிகள் உள்ளாட்சியில் போட்டியிட விருப்ப மனுக்கள் வாங்கி வருவதால், மீண்டும் வார்டு மக்கள் வசம் தங்கள் கருணை பார்வையை திருப்பியுள்ளனர். எனினும்  நாகர்கோவில் மாநகராட்சி புதிதாக அறிவிப்பட்டது என்பதால், வார்டு மறுசீரமைப்பு முழுமை பெறவில்லை. இதனால், எல்லை உறுதியாக தெரியாத நிலையில், முன்னாள் கவுன்சிலர்களே குத்து மதிப்பாக பக்கத்து வார்டுகளையும் போட்டி  போட்டு கவனிக்கும் நிலையில், புதுமுகங்களும் தங்கள் பங்கிற்கு மக்களை கவருவது எப்படி என யோசிக்க தொடங்கியுள்ளனர்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலை கட்சி தேர்தல் ஆர்வம் எல்லாம் வடிஞ்சு போச்சுனு சொல்றாங்களே.. உண்மையா..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘விரைவில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி தலைவர் மற்றும்  கவுன்சிலர்களுக்கான தேர்தல் அறிவிக்கப்பட உள்ளன. வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தில் 12 பேரூராட்சிகள், 3 நகராட்சிகள் உள்ளன. தூங்கா நகரம் பெயரில் முடியும் ஊரும் நகராட்சியாக அறிவிக்கப்பட்டிருப்பதால், இங்கே மேலும் ஒரு நகராட்சி அதிகரித்துள்ளது. இப்போதே ஆளும் கட்சியினர், கூட்டணியினருடன் இணைந்து தேர்தல் வேலைகளில் தீவிரமாக களமிறங்கி உள்ளனர். ஒவ்வொரு வீடாக சென்று வாக்காளர்களை சரி பார்க்கும் பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், இலைக்கட்சியினரோ தேர்தலில் நிற்க ஆர்வம் காட்டவில்லையாம்... இதனால் இக்கட்சி நிர்வாகிகள் ஆட்கள் தேடும் படலத்தில் தீவிரமாக இறங்கி  இருக்கின்றனர். ஆளுங்கட்சியாக இருந்தபோது வார்டுகளுக்கு  நான், நீ என போட்டி போட்டவர்கள், தற்போது, நீங்க இந்த வார்டுல நிக்கிறீங்களா என கேட்டால் தெறிச்சு ஓடுகிறார்களாம். கடந்தாண்டு சீட்  கேட்டவர்கள் பட்டியலை தலைமை வழங்கி பேச சொல்லியும், செல்போனை ஸ்விட்ச்  ஆஃப்’ செய்து விடுகிறார்களாம்... இதனால் மாவட்ட மற்றும் இரட்டைத்தலைமை டென்ஷனில் உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன...’’ என்றார் விக்கியானந்தா.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • trainnnnnjobbb

  ரயில்வே தேர்வு முறைேகட்டை எதிர்த்து போராட்டம்: பீகாரில் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைப்பு ..

 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்