ஆப்ரிக்க நாடுகளில் பரவும் புதிய வகை கொரோனா; முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து உயர் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை
2021-11-27@ 11:12:50

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், தடுப்பூசி குறித்து பிரதமர் மோடி தலைமையில் தற்போது ஆலோசனை நடைபெறுகிறது. கோவிட்-19 நிலைமை மற்றும் தடுப்பூசி குறித்து பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சரவை செயலாளர் ராஜீவ் கௌபா, பிரதமரின் முதன்மை செயலாளர் பிகே மிஸ்ரா, மத்திய சுகாதார செயலாளர் ராஜேஷ் பூஷன் மற்றும் நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) டாக்டர் விகே பால் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். ஆப்ரிக்க நாடுகளில் வீரியமிக்க கொரோனா பரவி வரும் நிலையில் அரசு அதிகாரிகளுடன் பிரதமர் மோடி ஆலோசிக்கிறார். புதிய கொரோனாவான ‘ஒமிக்ரான்’ பரவியுள்ள தென் ஆப்பிரிக்கா, போட்ஸ்வானா, ஹாங்காங் ஆகியவற்றில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்கள் மற்றும் இந்த நாடுகளின் வழியாக வருபவர்களையும் தீவிரமாக பரிசோதிக்க வேண்டும் என அனைத்து மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பாதிப்புகளின் தற்போதைய நிலைமை மற்றும் தடுப்பூசிகளை தயார் நிலையில் வைக்கவும் அதிகாரிகளுக்கு பிரதமர் கூறியுள்ளார்.
இந்தியாவில் நேற்று தினசரி பாதிப்பு சற்று அதிகம் காணப்பட்ட நிலையில் இன்று குறைந்துள்ளது. கடந்த 24-ம் தேதி 9,283-க்கும், 25-ம் தேதி 9,119 பேருக்கும், 26-ம் தேதி 10,549 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. மேலும் இன்று 8,318 பேருக்கு கொரோனா கண்டறியபட்ட நிலையில் 465 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 10,967 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிக வீரியத்துடன் பரவும் புதிய வகை கொரோனாவால் இந்தியாவில் யாரும் பாதிக்கப்படவில்லை என மத்திய அரசு நேற்று தகவல் தெரிவித்தது. பிப.1.1529 என்ற புதிய வகை கொரோனா ஆப்ரிக்க நாடுகளில் பரவி வரும் நிலையில் மத்திய அரசு விளக்கம் அளித்திருந்தது. தென் ஆப்பிக்கா உள்பட 3 நாடுகளிலிருந்து இந்தியாவரும் பயணிகளை ஏர்போர்ட்டிலேயே பரிசோதிக்க வேண்டும் என அறிவுறுத்தில் செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் நேற்று கூறப்பட்டது.
மேலும் செய்திகள்
நடிகர் திலீப்பின் ஜாமீனை ரத்து செய்ய கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றத்தை நாட போலீசார் முடிவு
பீகாரில் இடி, மின்னல் தாக்கி 16 பேர் பலி
மருத்துவமனைக்குள் புகுந்து பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற நாய்
நாளை தொடங்கி 43 நாட்கள் நடக்கிறது பக்தர்கள் வருகையால் அமர்நாத் யாத்திரை விழாக்கோலம் பூண்டது பலத்த போலீஸ் பாதுகாப்பு
100வது நாளை எட்டும் உ.பி. அரசு இலக்குகளை அடைய அமைச்சர்களுக்கு யோகி உத்தரவு
காத்மாண்டில் பானிபூரிக்கு தடை
ஆச்சர்யமூட்டும் கலைநயம்!: அமெரிக்கா சியாட்டெலில் அமைந்துள்ள கண்ணாடி பூங்காவின் வியக்க வைக்கும் புகைப்படங்கள்..!!
அமெரிக்காவில் ரயில் தடம் புரண்டு 3 பேர் பரிதாப சாவு; 50 பேர் காயம்
அசாம் வெள்ளப்பெருக்கு: 135 பேர் உயிரிழந்த நிலையில் மீட்புப்பணிகள் தீவிரம்
ஊர் சுற்றலாம் வாங்க!: உள்ளம் கொள்ளை கொள்ளும் அழகான இந்திய சுற்றுலா இடங்களின் புகைப்பட தொகுப்பு..!!
உக்ரைனில் 1,000 பேர் இருந்த மாலில் ரஷ்யா ஏவுகணை தாக்குதல்: 16 பேர் பலி... 59 பேர் படுகாயம்;