தமிழகத்தில் பதிவான மழை அளவு நிலவரம்: அதிகபட்சமாக ஆவடியில் 20 செ.மீ மழைப்பதிவு
2021-11-27@ 08:29:08

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த சில நாட்களாக மழை தொடர்ந்து பெய்து கொண்டுள்ளது. கனமழையாகவும், மிக கனமழையாகவும் அவ்வப்போது பெய்து வருகிறது. வடகடலோர மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீ-யை தாண்டி மழை பதிவாகியுள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பல இடங்களில் 10 செ.மீட்டரை தாண்டியுள்ளது.
இந்த சூழ்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 20 செ.மீ மழையும், சோழவரத்தில் 15 செ.மீ, திருவள்ளூரில் 13 செ.மீ, பொன்னேரியில் 12 செ.மீ, செம்பரம்பாக்கத்தில் 12 செ.மீ, காஞ்சிபுரம் தாலுக்கா அலுவலகத்தில் 12 செ.மீ, ஸ்ரீபெரும்புதூரில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மாமல்லப்புரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய இடங்களில் இன்று அதிகாலை வரை தலா 18 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இன்று அதிகாலை வரை திருக்கழுக்குன்றத்தில் 16.2 செ.மீ, மதுராந்தகத்தில் 15.4 செ.மீ , திருப்போரூரில் 10 செ.மீ என மழை பதிவாகியுள்ளது.
அம்பத்தூரில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பூர் 10 செ.மீ, அயனாவரத்தில் 10 செ.மீ, சென்னை டிஜிபி அலுவலகத்தில் 10 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நேற்று பிற்பகல் கனமழை பெய்த நிலையில் மாலை நேரத்தில் மழை குறைந்திருந்த நிலையில் இரவு நேரத்தில் பல இடங்களில் கனமழை பெய்துள்ளது.
Tags:
மழைமேலும் செய்திகள்
ஆராய்ச்சியில் ஆண் பெண் இருபாலருக்கும் சம வாய்ப்பு: CSIR தலைமை இயக்குநர் N.கலைசெல்வி பேச்சு
கோவையில் சட்டவிரோதமாக மண் எடுத்த செங்கல் சூளைகளுக்கு ரூ.373.74 கோடி அபராதம்: தேசிய பசுமை தீர்பாயத்துக்கு மாவட்ட ஆட்சியர் பரிந்துரை..!!
வெம்பக்கோட்டையில் ஆண் உருவம் சுடுமண் பொம்மை கண்டெடுப்பு
சேலத்தில் வாடகைக்கு வீடு எடுத்து துப்பாக்கி தயாரித்த வழக்கு சென்னை கோர்ட்டுக்கு மாற்றம்
புதுச்சேரி சட்டசபை காலவரையின்றி ஒத்திவைப்பு
வானூர் அருகே திமுக நிர்வாகி வெட்டிக்கொலை: 3 பேர் கைது 4 பேருக்கு வலை
பிரிட்டன் ஃபார்ன் தீவில் பரவும் பறவை காய்ச்சல்: ஆயிரக்கணக்கான பறவைகள் துடிதுடித்து இறப்பு..!!
ரக்ஷா பந்தனை முன்னிட்டு சென்னை சவுகார்பேட்டையில் ராக்கி கயிறு விற்பனை படு ஜோர்..!!
தைவான் கடல் எல்லைக்குள் ஏவுகணைகளை வீசி சீன ராணுவம் போர் பயிற்சி..!!
பறக்கும் ஹெலிகாப்டரில் 25 புல் அப்ஸ் எடுத்து கின்னஸ் சாதனை படைத்த யூடியூபர்!
எகிப்தில் 4500 ஆண்டு பழமையான சூரிய கோவில் கண்டுபிடிப்பு; தொல்லியல் துறை அசத்தல்..!!