ஜெயலலிதா நினைவிடம் நோக்கி டிச.5ம் தேதி பேரணி: அமமுக அறிவிப்பு
2021-11-27@ 01:06:36

சென்னை: ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5ம் தேதி மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் நோக்கி பேரணியாக சென்று அஞ்சலி செலுத்தப்படும் என அமமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து அமமுக தலைமைகழகம் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: ஜெயலலிதா நம்மை விட்டு மறைந்தாலும், இப்போதும் ஒவ்வொரு கணமும் நமக்குள் இருந்து நம்மை வழிநடத்திக் கொண்டிருக்கிறார். ஜெயலலிதாவின் நினைவு நாளான வருகிற 5.12.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணிக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் தலைமையில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலையிலிருந்து பேரணியாக சென்று, மெரினா கடற்கரையிலுள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்கவிருக்கிறோம்.
இந்நிகழ்வில், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், சார்பு அணிகளின் செயலாளர்கள், பொறுப்பாளர்கள், பொதுமக்கள் என அனைவரும் முகக்கவசம் அணிந்து போதிய சமூக இடைவெளியுடன் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொள்ளபடுகிறார்கள். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
எனது பிறந்தநாளுக்காக நேரில் வருவதை தவிர்த்துவிட்டு, உங்கள் பகுதிகளில் உள்ள ஏழை, எளிய மக்களுக்கு இயன்ற உதவிகளை செய்யுங்கள்: தொண்டர்களுக்கு சசிகலா கடிதம்
நிதிஷ்குமார் தலைமையிலான பீகார் அமைச்சரவை இன்று விரிவாக்கம்: 26 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்பு.. ஓபிசி பிரிவினருக்கு பிரதிநிதித்துவம்?
அதிமுகவினர் அனைவரும் கொடி ஏற்றுவது ஐயமே எங்களுக்கே தேசிய கொடி இன்னும் கிடைக்கவில்லை: செல்லூர் ராஜூ தடாலடி
அமைச்சர் கார் மீது செருப்பு வீச்சு கண்ணியமிக்க மதுரையில் இதுபோன்று நடந்ததே இல்லை: அதிமுக மாஜி அமைச்சர் உதயகுமார் கடும் கண்டனம்
நிதிஷ் கூட்டணி ஆட்சி பீகாரில் காங்.குக்கு 3 அமைச்சர் பதவி
பட்நவிசுக்கு உள்துறை, நிதித்துறை முதல்வர் ஷிண்டேவுக்கு ‘டம்மி’ துறை ஒதுக்கீடு: மகாராஷ்டிராவில் பாஜ ஆதிக்கம்
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!