SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மேகம் அள்ளி கொட்டியதும்... மேகநாத் மெல்ல ‘‘குட்டியதும்...’’‘‘விருதுநகர்ல மழை பெய்யுது சார்... லீவு? விடுமுறை தர்றேன்... வீட்டுப்பாடம் படி’’: மாணவருக்கு கலெக்டர் அனுப்பிய ட்விட் வைரல்

2021-11-27@ 00:04:01

விருதுநகர்: தமிழகத்தில் தொடர் மழை பெய்வதால் மக்கள் ஒருபுறம் அவதியடைந்தாலும், மறுபுறம் ‘நாளைக்கு ஸ்கூலு இருக்கா? இல்லையா?’ - என மாணவர்களின் புலம்பல் மாவட்டந்தோறும் பல வீடுகளில் ஒலிக்கிறது. வீட்டுல மட்டுமா? ஒரு மாணவர், நேரடியாக ட்விட்டரிலேயே கேட்டு பரபரப்பை ஏற்படுத்தியது வைரலாகி வருகிறது. விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாத் ரெட்டி. இவருக்கு ட்விட்டரில், ‘‘‘‘மழையால் திருவாரூர் மாவட்டத்துக்கு லீவு விட்டுட்டாங்க.  விருதுநகர் மாவட்டத்திலும் ரொம்ப மழை பெய்யுது சார்’’’’ என்று மாணவர் விஜய்சிவா விஷ்ணு கேட்டிருக்கிறார். இதற்கு பதிலளித்த கலெக்டர் மேகநாத் ரெட்டி, ‘‘‘‘விடுமுறைக்காக உன்னுடைய தொடர்ச்சியான கோரிக்கைகளுக்கு நன்றி. நமது மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது தம்பி. அதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு 26.11.2021ம் தேதி மட்டும் விடுமுறை. இந்த விடுமுறையை முழுமையாகப் பயன்படுத்தி வீட்டு பாடத்தை முடி. ஆசிரியர்கள் சரி பார்ப்பார்கள். பாதுகாப்பாக இரு’’’’ என்று பதிலளித்துள்ளார். இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கிடையில், இதே மாணவரான விஜய்சிவா விஷ்ணு, நவ. 10ம் தேதியன்று மழையால் மாவட்டத்திற்கு பள்ளிக்கு விடுமுறை அறிவித்திருந்த நிலையில், ட்விட்டரில், ‘‘ நவ. 11ம் தேதிவிருதுநகர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை விடப்படுமா?’’’’ என்று பதிவிட்டார். மாணவரின் இந்த பதிவைக் கண்ட கலெக்டர், ‘‘‘‘விடுமுறை இல்லை தம்பி... பள்ளிகூடம் போ. சூரியன் வெளியே வந்து விட்டது. படி... விளையாடு, மகிழ்வாய் இரு... நம் மாவட்டத்தில் நல்ல மழை பெய்ய வேண்டுமென சாமியை கும்பிட்டுக்கோ’’’’ என்று பதிலை முடித்துவிட்டார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sc-maha-24

    மகாராஷ்டிராவில் 1-12ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு!: மாணவர்கள் உற்சாகம்

  • jammu-vaccine-24

    கொரோனாவை வெல்லும் பேராயுதம் தடுப்பூசி!: ஜம்மு - காஷ்மீரில் சில்லிடும் குளிரில் சென்று தடுப்பூசி செலுத்தும் சேவகர்கள்..!!

  • republic20222

    டெல்லியில் குடியரசு தினவிழா ஒத்திகை : சிறப்பு படங்கள்

  • Coimbatore jallikattu

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவை செட்டிபாளையத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டி படங்கள்.

  • pipin-statue-21

    குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த பிபின் ராவத்தின் ஐம்பொன் சிலை தயாரிப்பு பணிகள் தீவிரம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்