அரையிறுதியில் சிந்து
2021-11-27@ 00:03:48

பாலி: இந்தோனேசியா ஓபன் பேட்மின்டன் தொடரின் மகளிர் ஒற்ரையர் பிரிவு அரையிறுயில் விளையாட, இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தகுதி பெற்றுள்ளார். காலிறுதியில் கொரியாவின் சிம் யுஜின் (22 வயது, 54வது ரேங்க்) உடன் நேற்று மோதிய சிந்து (26 வயது, 7வது ரேங்க்), 14-21 என்ற புள்ளி கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். தொடர்ந்து 2வது செட்டிலும் சிம் ஆதிக்கம் செலுத்திய நிலையில், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி பதிலடி கொடுத்த சிந்து 21-19 என கைப்பற்றி சமநிலை ஏற்படுத்தினார். அதே வேகத்துடன் 3வது செட்டிலும் புள்ளிகளைக் குவித்து முன்னேறிய சிந்து 14-21, 21-19, 21-14 என்ற கணக்கில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
விறுவிறுப்பான இப்போட்டி 1 மணி, 6 நிமிடங்களுக்கு நீடித்தது. இன்று நடைபெறும் அரையிறுதியில் தாய்லாந்து வீராங்கனை ரட்சனோக் இன்டனானுடன் (26 வயது, 8வது ரேங்க்) சிந்து மோத உள்ளார். கடந்த வாரம் இதே பாலி தீவில் நடந்த இந்தோனேசியா மாஸ்டர்ஸ் பேட்மின்டன் தொடரிலும் சிந்து அரையிறுதி வரை முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகள்
விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதியில் ரைபாகினா
மாஸ்டர்ஸ் மகளிர் உலக கோப்பை: இங்கிலாந்து செல்லும் இந்திய ஹாக்கி அணி
வங்கதேசத்துடன் 2வது டி20: வெஸ்ட் இண்டீஸ் வெற்றி
இந்தியாவுடன் 5வது டெஸ்ட்: இங்கிலாந்துக்கு 378 ரன் இலக்கு
ஷபாலி - மந்தனா அதிரடி ஆட்டம்: தொடரை வென்றது இந்தியா
வங்கதேசத்திற்கு எதிரான 2வது டி.20 போட்டி 35 ரன் வித்தியாசத்தில் வெ.இண்டீஸ் வெற்றி
தொடர் கனமழை : சிட்னி நகரத்தை சூழ்ந்த வெள்ளம்.. 50 ஆயிரம் மக்கள் வீடுகளை விட்டு வெளியேற அறிவுறுத்தல்..
மெக்சிகோவில் விநோதம்.! பெண் முதலையை முத்தம் கொடுத்து மணந்த மேயர்!!
தோண்ட தோண்ட சடலங்கள்.. மணிப்பூரில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்வு!!
அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் லாரி ஒன்றில் 53 அகதிகள் சடலமாக மீட்பு... 16 பேர் கவலைக்கிடம்!!
கலிபோர்னியாவில் மீண்டும் பற்றி எரியும் காட்டுத் தீ..135 ஏக்கர் வனப்பகுதி தீக்கிரை..!!