SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

திண்டுக்கல் மாநகராட்சி பகுதியில் பெயர்ந்தது பாதாளச் சாக்கடை ‘மேன்ஹோல்’-சீரமைக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை

2021-11-26@ 12:07:51

திண்டுக்கல் : திண்டுக்கல் மாநகராட்சி ரோடுகள் அனைத்தும் பாதாளச் சாக்கடை மூடிகள் உடைந்து பழுதடைந்து உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திண்டுக்கல் மாநகராட்சிகள் 48 வார்டுகள் உள்ளது. மாநகராட்சி எல்லை திண்டுக்கல் நகரை சுற்றி 5 கிலோ மீட்டருக்குள் முடிந்து விடுகிறது. ஆனால், பாதாள சாக்கடை திட்டம் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்டது. ஆனால், அதிமுக ஆட்சியில் நடந்த முறையற்ற பாதாள சாக்கடை பணிகளால் குழிகள் சரியாக மூடாமலும் ரோடுகள் மோசமடைந்து உள்ளதால், அடிக்கடி விபத்துக்கள் நடக்கின்றன.மழைநீரும், கழிவுநீரும் சேர்ந்து ஓடி வரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மழைக்காலம் துவங்கி உள்ளதால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி படுகின்றனர். திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் பாதாள சாக்கடை மூடி சேதமடைந்து விபத்து ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனை போக்க மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக ரோடுகளையும், பாதாளச் சாக்கடை மூடிகைளயும் சரி செய்ய வேண்டும். இல்லாவிட்டால் விபத்துகள் தவிர்க்க முடியாமல் போய்விடும். உயிர்பலி நடப்பதற்கு முன்பு குழிகளை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்