SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

யார் பேச்சுக்கு மவுசு அதிமுக மோதலால் எழுந்த பட்டிமன்றம் குறித்து சொல்கிறார்: wiki யானந்தா

2021-11-26@ 00:07:31

‘அதிமுக கூட்டத்துல நடந்த மோதல்தான் இன்னிக்கு பரபரப்பா இருக்கு. அதிலும் செங்கோட்டையன் பேச்சுதான் ஹைலைட்டாமே’என்று கேட்டார் பீட்டர் மாமா. சிரித்துக்கொண்டே  ஆரம்பித்தார் விக்கியானந்தா.
‘அதிமுக கூட்டத்துல ஓபிஎஸ், இபிஎஸ்  இருவரும் தங்கள் குறைகளை பேசினாங்களாம். அதில் யார் பேசினதுக்கு மவுசு  அதிகம்னு கட்சியினர் பட்டிமன்றம் போடுறாங்களாம். ஆனா முன்னாள் அமைச்சர்  சி.வி.சண்முகம்தான் யார் எழுந்து பேசினாலும், உட்கார்ந்த இடத்துல இருந்த  கவுன்டர் அடிச்சிட்டே இருந்தாராம். அதுல முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்  திடீரென எடப்பாடிக்கு எதிரா பேசினாராம். மண் புழுவுக்கு கூட கோபம் வருதே.  ஏன் பேசாம இருப்பவர் திடீரென மாற்றிப் பேசுகிறார். ஒரு வேளை ஓபிஎஸ்சுடன்  கூட்டணி போடுகிறாரோ என்று எடப்பாடி டீம் சந்தேகப்படுதாம். எப்போதும்  சந்தேகத்துக்கு உள்ளானவர்தானே நாமதான் அவரை நம்பிட்டோம்னு எடப்பாடி தரப்பு  செங்கோட்டையன் பற்றி பேசுறாங்களாம்’என்றார்.
வசூல் வேட்டையில் மாம்பல சிட்டி போக்குவரத்து பெண் எஸ்.ஐ.,க்கும், பெண் போலீசுக்கும் அப்படி என்னதான் பிரச்னை என்றார் பீட்டர் மாமா...
வேறென்ன... எப்பவுமே பணத்தை  அள்ளிக்கிட்டு போறவருக்கு, திடீரென்று தூண்டில் சிக்கிய ஒத்தை மீன் கிடைச்சா கடுப்பு வராம வேற என்ன வரும்? என்றார் விக்கி.
‘‘‘‘விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகளிடம் கறாக கரந்துகொண்டு வா என்கிறாராம் மங்களமான ஏரியாவின் போக்கவரத்து எஸ்ஐ. மறுத்தால் முகம் சிவாஜி ரேஞ்சுக்கு சிப்பாக கண்ணை உருட்டி ஒரு ரெட் அலர்ட் கொடுக்கிறாராம். 20நாளுக்கு முன்னாடி விபத்தில் சிக்கிய பஸ்சின் மேனேஜரிடம் அமவுண்ட் அள்ளிகிட்டு வான்னு சொல்லி கட்டாயப்படுத்தி இருக்கார். அந்தம்மா கிள்ளிக்கிட்டு கூட வரலியாம். ‘‘நான் இப்படித் தான், இஷ்டம் இருந்தால் வேலை செய், இல்லையென்றால் ஓடிடு’ என்கிறாராம். இதுதான் அந்த பெண் போலீசின் குமுறல். ஆனால் அந்த எஸ்.ஐ.,யோ நான் நேர்மையானவள் என்று மட்டும் ரத்தினச்சுருக்கமாக பதில் அளித்ததை கேட்டு டி.சி.,யே கொஞ்சம் ஆடித்தான் போனாராம். பிறகு அப்போதைக்கு சமரசம் பண்ணி அனுப்பி வச்சாராம் என்று கூறி கண்சிமிட்டினார் வக்கியானந்தா.
இலைகாலத்து அதிகாரிகள் வசூல் வேட்டையில் இன்னும் மிதக்கிறார்களாமே என்று கேட்டார் பீட்டா் மாமா. உன் காது வரைக்கும் அந்த தகவல் வந்துவிட்டதா என்று கேட்டுவிட்டு ஆரம்பித்தார் விக்கியானந்தா
‘பூட்டு மாவட்டத்தின் ‘‘குளுகுளு’’ மலைப்பகுதியில் கட்டிடங்கள் கட்டுவதற்கு பல வரைமுறைகள் உள்ளன. குறிப்பாக வணிக கட்டிடங்கள் கட்டுவதற்கு நகராட்சி, வனத்துறை, வருவாய்த்துறை, தீயணைப்புத்துறை, சுரங்கத்துறை அனுமதி அவசியம். இத்துறைகளின் அனுமதி பெற்ற பின்னரே கட்டிட பணிகளை துவக்க முடியும். கடந்த இலைக்கட்சி காலத்தில் ஒவ்வொரு துறைக்கும் ‘‘பல பெட்டிகள்’’ கொடுத்து கவனித்தால் மட்டுமே கோப்புகள் கையெழுத்து இடப்படுமாம். புதிய அரசு பொறுப்பேற்றதும், பல்வேறு நிலைகளில் முறைகேடுகள் களையப்பட்டு வருகிறது. எனினும் இலைக்கட்சி காலத்து அதிகாரிகளில் சிலர் இப்போதும் ‘‘வசூல்’’ வேட்டையை தொடர்வதாக குற்றச்சாட்டு இருக்கிறதாம்’ என்றார் விக்கியானந்தா.
கரன்சி குவிக்கும் போலி அதிகாரி கதை தெரியுமா என்று கேட்டார் பீட்டா் மாமா. இது கோவை மாநகராட்சி கூத்து என்று கூறினார் விக்கியானந்தா
‘கோவை மாநகராட்சியை பொறுத்தவரை முறைகேடு புகாரில் சிக்கும் அதிகாரிகளுக்கு உடனடி கல்தா கொடுத்து இடம்பெயர்வு செய்து விடுகிறார்களாம். அதில் சிக்கியவர்களில் முக்கிய பெண் அதிகாரி ஒருவர். இவர் மீதான பல்வேறு முறைகேடுகள் காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டார். இதுகூட பரவாயில்லை. அதே அலுவலகத்தில்  ஒருவர் அரசு அலுவலக அதிகாரிகள் உத்தரவு இல்லாமலேயே உள்ளே இருந்தவாறு தகிடு தத்தம் வேலைகளை செய்து வருகிறாராம். கடந்த ஏழு வருடமாக இங்கு தான் முகாம். அதிமுக ஆட்சியில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட நகரமைப்பு கல்லா பெட்டியை ரொம்பவே நிரப்பி கொடுத்து விசுவாசம் காட்டியுள்ளார்  ஆனால், பெண் அதிகாரிக்கு கிள்ளி கொடுத்துவிட்டு தனது பெட்டிக்கு அள்ளிக்கொண்டு சொத்து சேர்த்துள்ளாராம்.
பெண் அதிகாரி  இடமாற்றம் செய்யப்பட்டாலும் இப்போதும் அந்த போலி அதிகாரி கெத்து காட்றாராம்.  முற்றிலும், அலுவலக விதிகளை மீறி, தனி இருக்கை அமைத்துக்கொண்டு, கறாராக கரன்சி குவித்தாலும் அவரை கண்டு அஞ்சுகிறார்களாம். ஏனெனில் யார் கையும் சுத்தம் இல்லையாம். இதைவிட கொடுமை என்னவென்றால் இவரின் கண்ணசைவு கிட்டினால் தான் அரசுத்துறை கோப்புகளே அடுத்த டேபிளுக்கு நகர்கிறதாம். பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் கோவை மாநகராட்சி கமிஷனரின் பார்வையில் இந்த அதிகாரி மட்டும் சிக்காமல் இருப்பதன் மர்மம் தான் புரியவில்லை என்பது பலரது பேச்சாக உள்ளது’ என்றார் விக்கியானந்தா.
மலைக்கோட்டையில் கரன்சியில் நனையும் பெண் காக்கி அதிகாரி பேச்சுதான் ஹாட் டாபிக்காமே என்று கேட்டார் பீட்டர் மாமா. எல்லாமே லட்சத்தில்தான் டீல் என்று சிரித்தார் விக்கியானந்தா
‘‘‘‘ மலைக்கோட்டை மாநகர காவல் நிலையங்களில் கண்ணான பகுதியில் உள்ள விபச்சார தடுப்பு பிரிவில் கமிஷன் தாண்டவம் ஆடுகிறதாம்... விபச்சார வழக்கில் அழகிகள் சிக்கும் போது வழக்கு பதிவதற்கு முன் லட்ச கணக்கில் டீல் பேசப்படுமாம்.. இந்த டீலுக்கு புரோக்கர்கள்... அழகிகள் மசியா விட்டால் அவர்கள் மீது எப்ஐஆர் தான். சமீபத்தில் விஐபி பகுதியில் நடத்தப்பட்ட அதிரடி ரெய்டில் புரோக்கர் உள்பட அழகிகளை பெண் காக்கிகள் சுற்றி வளைத்தார்களாம்.. காக்கிகளுக்கு முன்னதாக புரோக்கர்கள் முந்திகொண்டு லட்சம் வரை டீல் பேசினார்களாம்.. இந்த டீலுக்கு பெண் காக்கி அதிகாரி ஓகே என்றதால் அவர்கள் மீது எப்ஐஆர் பதிவு இல்லையாம்.
இதே ஸ்டேஷனுக்கு உட்பட்ட பியூட்டி பார்லரில் சில தினங்களுக்கு முன் உயரதிகாரிகள் உத்தரவின் பேரில் நடந்த ரெய்டில் பியூட்டி பார்லர் என்ற பெயரில் விபசாரம் நடந்தது தெரிய வந்தது. உயரதிகாரிகள் உத்தரவு என்பதால் வழக்கம் போல் டீல் பேசப்பட வில்லையாம்.. இந்த பியூட்டி பார்லர் மீது எப்ஐஆர் போடப்பட்டு பார்லரும் பூட்டப்பட்டதாம்.. ஆனால்... தற்போது அதே பியூட்டி பார்லர் வேறு ஒரு பெயரில் மீண்டும் செயல்படுகிறது என்பது ஹைைலட்.  பியூட்டி பார்லரில் விபச்சாரம் நடக்காது என உயரதிகாரியிடம் உத்தரவாதம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.. பியூட்டி பார்லர் மீண்டும் களை கட்டியுள்ளதால் கண்ணான பகுதி காவல் நிலையமும் டீலிங்கிலும் களை கட்டியுள்ளதாக சக காக்கிகளின் காதில் புகை வருகிறதாம்’ என்றார் விக்கியானந்தா.  

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • oil-hair-peru-27

  சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!: கடலில் கசிந்த எண்ணெயை அகற்ற தலைமுடியை தானம் செய்யும் பெரு நாட்டவர்..!!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  புறக்கணிக்கப்பட்ட அலங்கார ஊர்திகள் - சென்னை குடியரசு தின விழாவில் அணிவகுப்பு!

 • Republic Day Tamilnadu

  Neglected Decorated Vehicles - Parade on Republic Day in Chennai!

 • Republic Day Chennai

  சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழா கொண்டாட்டத்தில்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்