SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 18% பேர் முதல் தவணைகூட போடவில்லை; மாநகராட்சி அதிகாரிகள் தகவல்.!

2021-11-25@ 21:47:54

சென்னை: சென்னை மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் 18% பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை. அதைப்போன்று 28 % பேர் 2ம் தவணை செலுத்தவில்லை என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில்  மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து இன்று 200 வார்டுகளிலும் 1600 கோவிட் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களில் 2 லட்சம் நபர்களுக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாட்கள் கடந்து இரண்டாம்  தவணை தடுப்பூசி செலுத்தாமல் 7,91,024 பேர் உள்ளனர்.

அதாவது 28 சதவீதம் பேர்  முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி விட்டு இரண்டாம் தவணை செலுத்திக்  கொள்ளாமல் உள்ளனர். இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தினால் மட்டுமே கோவிட் தொற்று பாதிப்பிலிருந்து முழுமையாக நம்மை பாதுகாத்துக் கொள்ளும் வகையில்  முழு எதிர்ப்பு சக்தி கிடைக்கும். எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கோவிட் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தடுப்பூசி மற்றும் முகக்கவசம் அணிதல் இரண்டும் மிகவும் இன்றியமையாதது. இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்துள்ள நபர்கள் அலட்சியமாக இல்லாமல் இந்தத் தடுப்பூசி முகாமினை பயன்படுத்திக் கொண்டு இரண்டாம் தவணை தடுப்பூசியினை தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.

மேலும் சென்னையில் 82 சதவீதம் பேர் முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்த தகுதியுடைவர்கள் 55 லட்சத்து 30 ஆயிரத்து 900 பேர், அதில் 45 லட்சத்து 45 ஆயிரத்து 826 பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இது சென்னை மக்கள் தொகையில் 82 சதவீதம் ஆகும். அதைப்போன்று 30 லட்சத்து 786 பேர் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இது மக்கள் தொகையில் 54 சதவீதம் ஆகும். சென்னை மொத்த மக்கள் தொகையில் தடுப்பூசி செலுத்த தகுதியானவர்களில் இதுவரை 18 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி கூட செலுத்தவில்லை. அதன்படி கொரோனா தடுப்பு ஊசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்தை கடந்துள்ளது. சென்னையில் தற்பொழுது 10,99,195 கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்