SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

தமிழகத்தில் 21.05 லட்சம் மாட்டினங்களுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது.! கால்நடை பராமரிப்புத்துறை தகவல்

2021-11-25@ 19:29:32

சென்னை: தமிழக கால்நடை பராமரிப்புத்துறை மூலம் மாட்டினங்களில் கோமாரி நோய் தடுப்பூசி பணி மற்றும்  கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்பான விவரம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோமாரி நோய் தடுப்பூசி பணி 2011 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டுவரை மத்திய - மாநில அரசு நிதி உதவியுடன் கோமாரி நோய் தடுப்பு திட்டத்தின் கீழ்  வருடத்திற்கு இரண்டு சுற்றுகள் வீதம்  மொத்தம் 17 சுற்றுகளாக   ஆறு மாதம் இடைவெளியில் தடுப்பூசி முகாம்கள் மாநிலம் முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. 2020 ஆம் ஆண்டு முதல் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் ஒன்றிய அரசால் நூறு சதவீதம் மானியத்தில் தமிழகத்திற்கு வழங்கப்பட்டு வருகிறது.  

2020 ஆம் ஆண்டில் தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ்  முதல் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணி  செப்டம்பர்-2020ல்  முடிவடைந்து மொத்தம்  87.03 இலட்சம் மாட்டினங்கள்   பயனடைந்தன. 2021 ஆம் ஆண்டில் இரண்டாம் சுற்று கோமாரி நோய் தடுப்பூசிப்பணிக்கு தேவைப்படும் 90.00 இலட்சம் தடுப்பூசி அலகுகள் வழங்கிட ஒன்றிய அரசிடம் கோரப்பட்டுள்ளது.   எனினும் ஒன்றிய அரசால்    கோமாரி நோய் தடுப்பூசி  மருந்துகள்  வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் தமிழக கால்நடை பராமரிப்புத்துறையின் கீழ் இயங்கும் கால்நடை மருத்துவ நிலையங்களிலுள்ள குளிப்பதன அறையில் பாதுகாக்கப்பட்ட கையிருப்பு கோமாரி நோய் தடுப்பூசி மருந்தினை கொண்டு நோய் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையாக கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களின் எல்லையோர தமிழக மாவட்டங்களான ஈரோடு, தேனி, தென்காசி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், நீலகிரி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் எல்லையோர கிராமங்களில் மாட்டினங்களில்  சுமார் 2.69 இலட்சம் தடுப்பூசி  செப்டம்பர்-2021-ல் போடப்பட்டுள்ளது. நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கோமாரி நோய் தடுப்பூசிப்பணி நூறு சதவீதம் நிறைவடைந்துள்ளது.

தற்போது 28.85 இலட்சம் அளவில் கோமாரி நோய்  தடுப்பூசி அக்டோபர்- 2021 மற்றும் நவம்பர்-2021 மாதங்களில்  ஒன்றிய அரசிடமிருந்து பெறப்பட்டு  ஈரோடு, தஞ்சாவூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், திருவண்ணாமலை, தர்மபுரி, மதுரை, தேனி, திருவாரூர், சிவகங்கை, கிருஷ்ணகிரி, கரூர், நாமக்கல், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களிலுள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசிப் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவநிலை காலங்களில் ஏற்படும் நோய் கிளர்ச்சி  பகுதிகளில் கால்நடை  மருத்துவ குழுக்கள் அமைத்து பாதிக்கப்பட்ட  கால்நடைகளுக்கு உரிய  சிகிச்சை அளித்தும் மற்றும் விவசாயிகளுக்கு கால்நடைகளில் ஏற்படும் நோய் தொற்று,, நோய் தடுப்பு முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கால்நடைகளின் நலன் பாதுகாக்கப்பபடுகிறது.  

மேலும் தொற்றுநோய் மற்றும் மழை காலங்களில் கால்நடை நோய் புலணாய்வு பிரிவுகள்  மூலம் தீவிர  கண்காணிப்பு, கடுங்காணிப்பு  நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அக்டோபர்-2021 ஆம்  மாதம்  தொடங்கி மொத்தம் 1457 கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளது.  அம்முகாம்களில் 97,563 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டும், 1,48,209 கால்நடைகளுக்கு குடற்புழு நீக்கம் செய்யப்பட்டும், 6,60,703 கால்நடைகளுக்கு  இதர தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது. மேலும் 21,069 கிலோ  தாதுஉப்புக்கலவை கால்நடை வளர்ப்போர்க்கு  இலவசமாக விநியோகிக்கப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை காரணமாக அதிக அளவில் பாதிக்கப்பட்ட பகுதிகளில்  சிறப்பு கால்நடை மருத்துவ முகாம்கள் மூலமாகவும், நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்தி கொண்டும், கால்நடை அவசர சிகிச்சை ஊர்தி எண்.1962  கொண்டும்,  கால்நடை   மருத்துவ குழுக்கள் மூலமாக கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி செலுத்த முகாம்கள் நடைபெற்று வருகிறது. மேலும், தேவைப்படும் மாவட்டங்களுக்கு பிற மாவட்டங்களிலிருந்தும் மருத்துவ குழுக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது.

விவசாய பெருமக்களிடம் கோமாரி நோய் தடுப்பு பணிகள் மற்றும் மேற்கண்ட முகாம்கள் தொடர்பான விழிப்புனர்வு ஏற்படுத்தும் வகையில்  பெருமளவில் விளம்பரங்கள் அனைத்து மாவட்டங்கள் முழுவதும் செய்யப்பட்டு வருகிறது.  24.11.2021 அன்று வரை மொத்தம் 21.05 இலட்சம் மாட்டினங்களுக்கு கோமாரி தடுப்பூசி போடப்பட்டுள்ளது. ஒன்றிய அரசிடம் மீதமுள்ள 61.15 இலட்சம் கோமாரி நோய் தடுப்பூசி வழங்கக் கோரி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைத்து மாவட்டங்களிலுள்ள கால்நடைகளுக்கும் கோமாரி தடுப்பூசிப் பணி நிறைவு செய்யும் பொருட்டு, கால்நடை பராமரிப்புத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுதொடர்பாக, ஒன்றிய அரசிற்கு, கோமாரி தடுப்பூசி முழுமையாக வழங்கக் கோரி தமிழக அரசால் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், நோய் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கால்நடை வளர்போரிடம் நோய் குறித்த விழிப்புணர்வு, சுகாதார முறையில் கொட்டகை மற்றும் கால்நடைகளை பராமரிக்கவும், நோய் தொற்று அறிகுறி தென்பட்டால் உரிய சிகிச்சை மேற்கொள்ளவும் கால்நடை மருத்துவ முகாம்கள் நடத்தவும், அனைத்து கால்நடை நிலையங்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ambedkar

    சட்டமேதை அம்பேத்கரின் 65வது நினைவு நாள்: குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை..!!

  • AIADMK

    பன்னீர்செல்வம், பழனிசாமி போட்டியின்றி தேர்வு

  • animal-snake-6

    சென்னை பாம்பு பண்ணையில் உள்ள பிரத்யேக விலங்குகளுக்கு உணவு அளித்து மகிழும் பார்வையாளர்கள்..!!

  • trichy 06

    திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி விழாவின மூன்றாம் நாளாக அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளியுள்ள ஆழ்வார்கள்

  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்