SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.! ரிசர்வ் வங்கி அறிவிப்பு

2021-11-25@ 17:49:12

டெல்லி: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகளின் விடுமுறை நாட்களின் பட்டியலை ஒவ்வொரு மாதமும் இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டு வருகிறது. அதன்படி, வரும் டிசம்பர் மாதத்தில் 16 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை நாட்கள் பொருந்துவதில்லை.

மாநிலங்களுக்கு ஏற்ற வகையில் இந்த விடுமுறை நாட்கள் மாறுபடுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான தங்கள் பணிகளை திட்டமிடுவதற்கு முன்னர் விடுமுறை தினங்களை திட்டமிட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர். வாடிக்கையாளர்களின் வசதிக்காக டிசம்பர் மாத வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

* 3 டிசம்பர் - புனித பிரான்சிஸ் சேவியர் விழா (பனாஜியில் வங்கிகள் மூடப்படும்.)

* 5 டிசம்பர் – ஞாயிறு

* 11 டிசம்பர் – சனிக்கிழமை (மாதத்தின் 2வது சனிக்கிழமை)

* 12 டிசம்பர் – ஞாயிறு

* 18 டிசம்பர் – யு சோ சோ தாம் கீ இறந்த நாள் (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)

* 19 டிசம்பர் – ஞாயிறு

* 24 டிசம்பர் – கிறிஸ்துமஸ் பண்டிகை (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

* 25 டிசம்பர் – கிறிஸ்துமஸ் (பெங்களூரு மற்றும் புவனேஸ்வர் தவிர அனைத்து இடங்களிலும் வங்கிகள்
மூடப்படும்) சனிக்கிழமை, (மாதத்தின் நான்காவது சனிக்கிழமை)

* 26 டிசம்பர் – ஞாயிறு

* 27 டிசம்பர் – கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

* 30 டிசம்பர் – யு கியாங் நோங்பா (ஷில்லாங்கில் வங்கிகள் மூடப்படும்)

* 31 டிசம்பர் – புத்தாண்டு கொண்டாட்டம் (ஐஸ்வாலில் வங்கிகள் மூடப்படும்)

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • ooty_flower

    பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!

  • bharat111

    சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு

  • charles_kameela

    3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை

  • arungatchimmaa1

    சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!

  • porkappal1

    முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்