SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பிரபல டான்ஸ் மாஸ்டர் சிவசங்கர் கவலைக்கிடம்.! நடிகர் சோனு சூட் உதவி

2021-11-25@ 17:04:17

சென்னை: தமிழ் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில், 800 படங்களுக்கு மேல் நடனக்காட்சி அமைத்தவர் சிவசங்கர். ‘வரலாறு’, ‘ஒன்பது ரூபாய் நோட்டு’, ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’, ‘தில்லுமுல்லு’, ‘அரண்மனை’, ‘கஜினிகாந்த்’, ‘தானா சேர்ந்த கூட்டம்’ , ‘சர்கார்’ உள்பட பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். ‘பூவே உனக்காக’, ‘விஷ்வதுளசி’, ‘வரலாறு’, ‘உளியின் ஓசை’ ஆகிய படங்களுக்காக தமிழக அரசின் சிறந்த நடன இயக்குனர் விருது பெற்றுள்ளார். பாலு மகேந்திரா இயக்கிய ‘மறுபடியும்’ படத்தில் ரோகிணி நடனமாடிய ‘ஆச அதிகம் வெச்சு’, தனுஷ் நடித்த ‘திருடா திருடி’ படத்தில் இடம்பெற்ற ‘மன்மத ராசா’ போன்ற புகழ்பெற்ற பாடல்களுக்கு சிவசங்கர் நடனக்காட்சி அமைத்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சிவசங்கர், அவரது மனைவி, மூத்த மகன் ஆகியோர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மூவரில் சிவசங்கர் மிகவும் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கு அதிக செலவாகிறது என்றும், தனது குடும்பத்தினரால் அவ்வளவு பணத்தை செலுத்த முடியவில்லை என்றும், சிவசங்கரின் மருத்துவச் செலவுக்கு உதவும்படி அவரது மகன் அஜய் முரளி கிருஷ்ணா சமூக வலைத்தளத்தில் உதவி கேட்டுள்ளார். இந்நிலையில், சிவசங்கர் உடல்நிலை பற்றி அறிந்த நடிகர் சோனு சூட் அவருக்கு உதவ முன்வந்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டிவிட்டரில், ‘நான் ஏற்கனவே அவரது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கிறேன். அவரது உயிரைக் காப்பாற்ற என்னால் முடிந்ததை செய்வேன்’ என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • omicron virus

  ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

 • parliament session 01

  பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

 • mkstalin_011221

  கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

 • delhi-air-1

  மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

 • aids-1

  வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்