SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

சென்னை அணியில் டோனி, ஜடேஜா, ருதுராஜ், மொயின்அலி; ஐபிஎல் அணிகள் தக்க வைக்க போகும் வீரர்கள் யார், யார்? லக்னோ அணி கேப்டனாகிறார் கே.எல்.ராகுல்

2021-11-25@ 16:40:28

மும்பை: 15வது சீசன் ஐபிஎல் தொடர் சென்னையில் வரும் ஏப்.2ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் புதிதாக அகமதாபாத், லக்னோ அணிகள் பங்கேற்கின்றன. இதனால் அணிகள் எண்ணிக்கை 10ஆக உயர்ந்துள்ள நிலையில் போட்டிகள் எண்ணிக்கையும் 60ல் இருந்து 74ஆக அதிகரிக்கிறது. ஐபிஎல் வீரர்களுக்கான மெகா ஏலம் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற உள்ளது. ஒவ்வொரு அணிகள் 4 வீரர்களை தக்க வைக்கலாம். 3 இந்திய வீரர், ஒரு வெளிநாட்டு வீரர், அல்லது 2 இந்திய வீரர், 2 வெளிநாட்டு வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம். தக்க வைக்கப்போகும் வீரர்கள் பட்டியலை வரும் 30ம்தேதி மதியம் 12 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ்அணி கேப்டன் டோனி, ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் மொயின் அலி, டூபிளசிஸ், சாம்கரன் ஆகியோரில் ஒருவரை தக்க வைக்கும் என தெரிகிறது. இதில் மொயின் அலிக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளது. ஐபிஎல் தொடங்கியதில் இருந்து முதன் முறையாக ரெய்னாவை சென்னை கழற்றி விட்டுள்ளது. இதேபோல் டெல்லி கேபிட்டல்ஸ் ரிஷப்பன்ட், பிரித்வி ஷா, அக்சர்பட்டேல், அன்ரிச் நார்ட்ஜேவையும், மும்பை இந்தியன்ஸ் ரோகித்சர்மா, பும்ரா, பொல்லார்ட், இஷான்கிஷனையும், கொல்கத்தா சுனில்நரேன், ரஸ்சல், வெங்கடேஷ் அய்யர், வருண் சக்கரவர்த்தி ஆகியோரையும் தக்க வைக்கும் என தகவல் வெளியாகி இருக்கிறது.

பெங்களூரு அணி விராட் கோஹ்லி, மேக்ஸ்வெல், படிக்கல், சாஹல் அல்லது ஜாம்பாவையும், ராஜஸ்தான் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லரையும்,  ஐதராபாத் வில்லியம்சன், ரஷித்கானையும் தக்கவைக்கலாம். பஞ்சாப் அணி மயங்க் அகர்வால், ரவி பிஷ்னோய் மற்றும் ஷாருக்கான் ஆகியோரை தக்கவைக்கலாம். பஞ்சாப் கேப்டன் கே.எல்.ராகுல், அந்த அணியில் இருந்து விலகி புதிதாக இணைய உள்ள லக்னோ அணியை வழி நடத்தும் வாய்ப்பை ஏற்றுக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அணிகள் தக்க வைக்கும் 4 வீரர்களுக்கும் மொத்த ஏலத்தொகை ரூ.90 கோடியில் இருந்து 42 கோடி கழிக்கப்படும். தக்க வைக்கப்படும் முதல் வீரருக்கு ரூ.16, 2வது வீரருக்கு ரூ.12, 3வது ரூ.8, 4வது ரூ.6 கோடி என கழிக்கப்படும். 3 பேரை தக்க வைத்தால் ரூ.33 கோடியும், 2 பேரை தக்க வைத்தால் ரூ.24 கோடியும், ஒருவரை மட்டும் தக்க வைத்தால் ரூ.14 கோடியும் கழிக்கப்படும்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • omicron virus

    ஓமைக்ரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக உலக நாடுகளில் விமான நிலையங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிப்பு

  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்