உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் ரக ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பல் இந்திய கடற்படையுடன் இணைப்பு..!!
2021-11-25@ 15:15:55

மும்பை: இந்திய கடற்படைக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது. ஒன்றிய அரசின் சுயசார்பு இந்தியா திட்டத்தின் கீழ் ஸ்கார்பியன் வகையை சேர்ந்த 6 நீர்மூழ்கி கப்பலை கட்ட திட்டமிடப்பட்டது. அதன்படி இந்தியா - பிரான்ஸ் கூட்டணியில் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஸ்கார்பியன் வகையை சேர்ந்த கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய 3 நீர்மூழ்கி கப்பல்கள் ஏற்கனவே இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஸ்கார்பியன் ரகத்தை சேர்ந்த 4வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வேலா இன்று நாட்டிற்கு அர்பணிக்கப்பட்டது.
மும்பை கடற்படை தளத்தில், கடற்படைத் தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் முன்னிலையில் இந்த நீர்மூழ்கி கப்பல், இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த கப்பலில் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் சென்சார் செயலிகள் கொரோனா பெருந்தொற்று காரணமாக பெரிய துறைமுகங்கள் மற்றும் கடல் பகுதியில் சோதனை செய்து பார்க்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பலை கடற்படை தளபதி அட்மிரல் கரம்பீர் சிங் இயக்கினார்.
இந்திய பெருங்கடல் பகுதியில் சீன ராணுவத்தின் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் நிலையில் இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கிக் கப்பலின் இணைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. ஒன்றிய அரசுக்கு சொந்தமான மசகான் டாக் என்கிற கப்பல் தயாரிப்பு நிறுவனம் நீர்மூழ்கி கப்பலை கட்டமைத்துள்ளது. நீர்மூழ்கி கப்பல் இணைத்ததன் மூலம், இந்திய கடற்படைக்கு மேலும் வலிமை சேர்ந்துள்ளது.
மேலும் செய்திகள்
நாட்டுப்புற நிகழ்ச்சியில் நடனமாடிய நடிகை மீது வழக்கு
எரிபொருள் விலை குறைப்பு குறித்த அறிவிப்பால் மக்களை முட்டாளாக்குவதை ஒன்றிய அரசு நிறுத்த வேண்டும்: ராகுல் காந்தி ட்வீட்
பழங்குடியின மக்களின் தொடர் எதிர்ப்பால் தபி - நர்மதா நதிகள் இணைப்பு திட்டம் ரத்து: குஜராத் தேர்தல் தோல்வி அச்சத்தால் பாஜக பல்டி
நாடு முழுவதும் உள்ள தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் B.E., B.Tech., B.Arch. ஆகிய படிப்புகளுக்கான கட்டணம் உயர்வு: புதிய கட்டண விகிதத்தை வெளியிட்டது AICTE
முதியவரை அடித்தே கொன்ற கொடூரம்.. வெறுப்புணர்வை பாஜக தூபம் போட்டு வளர்ப்பதாக காங். புகார்: அரசியல் வேண்டாம், உரிய நடவடிக்கை நிச்சயம்: ம.பி. அரசு
அசாமை புரட்டிப்போட்ட வெள்ளம், நிலச்சரிவு... பலி எண்ணிக்கை 18 ஆக அதிகரிப்பு; 7.11 லட்சம் பேர் தவிப்பு
பூத்துக்குலுங்கும் வண்ண மலர்களோடு இன்று தொடங்கியது உதகை மலர் கண்காட்சி..!!
சென்னை ஐசிஎப் தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில் பணிகள் : ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
3 நாள் சுற்றுப்பயணமாக இளவரசர் சார்லஸ்- கமிலா தம்பதி கனடா வருகை
சர்வதேச அருங்காட்சியக தினம் : நாடு முழுவதும் உள்ள அருங்காட்சியங்களில் குவிந்த மக்கள்!!
முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்