SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி இன்று தொடக்கம்: இரவு 8.00 மணிக்கு இந்தியா-பிரான்ஸ் மோதல்

2021-11-24@ 00:15:36

புவனேஸ்வர்: ஜூனியர் ஆடவர் உலக கோப்பை ஹாக்கி போட்டி புவனேஸ்வரில் இன்று தொடங்குகிறது. இந்தியா தனது முதல் லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணியை எதிர்கொள்கிறது. ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் ஜூனியர் (யு21) ஆடவர் உலக கோப்பை ஹாக்கிப் போட்டி இன்று தொடங்கி டிசம்பர் 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இதில்  நடப்பு சாம்பியன் இந்தியா, பிரான்ஸ், அர்ஜென்டினா, மலேசியா,  எகிப்து, பாகிஸ்தான் உள்பட 16 நாடுகள் பங்கேற்கின்றன.
தலா 4 அணிகளை கொண்ட 4 பிரிவுகளில் லீக் சுற்று நடைபெற உள்ளது. பி பிரிவில்  இடம் பெற்றுள்ள இந்திய அணி கனடா, பிரான்ஸ், போலந்து அணிகளின் சவாலை சந்திக்கிறது. விவேக் பிரசாத் சாகர் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் பிரான்சை எதிர்கொள்கிறது. இப்போட்டி இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது. லீக் சுற்றின் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள்  காலிறுதிக்கு தகுதி பெறும்.
காலிறுதி ஆட்டங்கள் டிச.1ம் தேதியும், அரையிறுதி ஆட்டங்கள் டிச.3ம் தேதியும், இறுதி ஆட்டம்  டிச.5ம் தேதியும் நடைபெறும்.

* வந்தது பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான் இடையில் நிலவும் மோதல் போக்கு காரணமாக பாதிக்கப்பட்டது  விளையாட்டு வீரர்களும், ரசிகர்களும்தான். அதனால் இந்தியாவுக்கு பாகிஸ்தான் அணி வருவதும், இந்திய அணி பாகிஸ்தானுக்கு போவதும் அரிதாகிப் போனது. இந்நிலையில், இன்று தொடங்கும் உலக கோப்பையில் பங்கேற்க பாகிஸ்தான் ஜூனியர் ஹாக்கி அணி 3 நாட்களுக்கு முன்பு புவனேஸ்வர் வந்து சேர்ந்தது.

* தமிழக வீரருக்கு வாய்ப்பில்லை
இந்திய ஹாக்கி அணியில் பல ஆண்டுகளாகவே தமிழக வீரர்களுக்கு இடம் கிடைக்கவில்லை. கோவில்பட்டியை சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளி மகன் மாரீஸ்வரன் சக்திவேல், உலக கோப்பைக்கான இந்திய அணி பயிற்சி முகாமில் பங்கேற்றார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அணியில் அவர் இடம் பெறவில்லை.

இந்திய அணி: விவேக் சாகர் பிரசாத் (கேப்டன்), சஞ்ஜெய் (துணை கேப்டன்), பிரஷாந்த் சவுகான், பவான் (கோல் கீப்பர்கள்), ஷர்தானந்த்  திவாரி, சுதீப் சிர்மகோ, ராகுல் குமார் ராஜ்பர், மனீந்தர் சிங், விஷ்ணு காந்த் சிங், அங்கித் பால், உத்தம் சிங், சுனில் ஜோஜோ, மஞ்சித், ரபிசந்திர சிங் மொய்ரங்தம், அபிஷேக் லக்ரா, யஷ்தீப் சிவாச், குருமுக் சிங், அரைஜித் சிங் ஹுன்டல்.

ஏ பிரிவு: பெல்ஜியம், மலேசியா, தென் ஆப்ரிக்கா, சிலி
பி பிரிவு: இந்தியா, கனடா, பிரான்ஸ், போலந்து
சி பிரிவு: நெதர்லாந்து, ஸ்பெயின், கொரியா, அமெரிக்கா
டி பிரிவு: ஜெர்மனி, அர்ஜென்டினா, பாகிஸ்தான், எகிப்து
இந்தியா மோதும் லீக் ஆட்டங்கள்
நவ.24    இரவு 8.00    பிரான்ஸ்
நவ.25    இரவு 7.30    கனடா
நவ.27    இரவு 7.30    போலந்து

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • porkappal1

  முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 2 போர்க்கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார் ராஜ்நாத்சிங்

 • france_elizabeth

  30 ஆண்டுகளுக்கு பிறகு பிரான்சில் பெண் பிரதமர் பதவியேற்பு..!!

 • assam-rain-17

  அசாமில் அடித்து நொறுக்கிய கனமழை!: வெள்ளத்தில் மூழ்கிய ரயில் நிலையம்...2 லட்சம் பேர் பாதிப்பு..!!

 • ramnjamaiii

  ஜமைக்காவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்: அம்பேதகர் சதுக்கத்தை திறந்து வைத்து மரக்கன்றை நட்டார்!!

 • pudha_purnima

  உலகம் முழுவதும் புத்த பூர்ணிமா கோலாகல கொண்டாட்டம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்