SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

நவம்பர் 26ம் தேதி முதல் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணம் அதிரடியாக உயர்வு: ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ஷாக்!!

2021-11-22@ 12:41:33

மும்பை : நவம்பர் 26ம் தேதி முதல் பாரதி ஏர்டெல் நிறுவனம் ப்ரீபெய்டு திட்டங்களுக்கான கட்டணத்தை உயர்த்துகிறது. அதன்படி, 28 நாட்கள் வேலிடிட்டிக்கான ரீசார்ஜ் கட்டணம் ரூ. 79ல் இருந்து ரூ.99 ஆக உயர்கிறது. ரூ.99 திட்டத்தில் (முன்பு ரூ.79) ரூ. 99 மதிப்புள்ள டாக்டைம் மற்றும் 200 எம்பி டேட்டா ஆகியவை கிடைக்கிறது  அதே போல், 28 நாட்களுக்கு 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.149ல் இருந்து ரூ.179 ஆக  உயர்கிறது.28 நாட்களுக்கு  தினமும் 1ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.219ல் இருந்து ரூ.265 ஆக  உயர்கிறது.

28 நாட்களுக்கு  தினமும்  1.5ஜிபி மற்றும்  அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.249ல் இருந்து ரூ.299 ஆக  உயர்கிறது.28 நாட்களுக்கு  தினமும் 2 ஜிபி மற்றும்  அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.298ல் இருந்து ரூ.359 ஆக அதிகரிக்கிறது. 56 நாட்களுக்கு தினமும்  1.5 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.399ல் இருந்து ரூ.479 ஆக அதிகரிக்கிறது. 56 நாட்களுக்கு தினமும் 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.449ல் இருந்து ரூ.549 ஆக அதிகரிக்கிறது. 84 நாட்களுக்கு 6 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.379ல் இருந்து ரூ.455 ஆக அதிகரிக்கிறது.

84 நாட்களுக்கு தினமும் 1.5 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.598ல் இருந்து ரூ.719 ஆக அதிகரிக்கிறது.84 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.698ல் இருந்து ரூ.839 ஆக அதிகரிக்கிறது. 365 நாட்களுக்கு 24 ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.1498ல் இருந்து ரூ.1799 ஆக அதிகரிக்கிறது. 365 நாட்களுக்கு தினமும் 2ஜிபி மற்றும் அன்லிமிடெட் காலஸ் கொண்ட ரீசார்ஜ் கட்டணம் ரூ.2498ல் இருந்து ரூ.2999 ஆக உயர்கிறது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • parliament session 01

    பார்லி. கூட்டத்தில் எதிர்கட்சிகள் வௌிநடப்பு: இறந்த விவசாயிகளின் விபரம் இல்லை: ஒன்றிய அரசின் தகவலால் அதிர்ச்சி

  • mkstalin_011221

    கனமழையால் பாதிக்கப்பட்ட செம்மஞ்சேரி பகுதிகளில் 2வது நாளாக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு: நிவாரண உதவிகள் வழங்கினார்

  • delhi-air-1

    மூச்சுவிட முடியல: டெல்லியில் தொடர்ந்து நீடிக்கும் காற்று மாசால் அல்லல்படும் மக்கள்..!!

  • aids-1

    வாழ்க்கை அழகானது அதை ஆள்கொல்லிக்கு கொடுத்துவிடாதே!: உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொதுமக்கள்..!!

  • christmas-30

    நெருங்கும் கிறிஸ்துமஸ் பண்டிகை: ஒளி வெள்ளத்தில் ஜொலிக்கும் வெள்ளை மாளிகையின் புகைப்படங்கள்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்