ஆந்திராவில் கனமழை காரணமாக 41 பேர் பலி... திருப்பதியில் மிகப்பெரிய ஏரி உடையும் அபாயம்!!!
2021-11-22@ 10:43:48

ஹைதராபாத் : ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதி அருகே Rayalacheruvu ஏரி நிர்மபி உடையும் அபாயம் ஏற்பட்டதால் 18 கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 500 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணதேவராயர் காலத்தில் கட்டப்பட்ட 358 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட Rayalacheruvu ஏரி, சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்த ஏரி கனமழையால் பல ஆண்டுகளுக்கு பிறகு நிரம்பி வழிந்து வருகிறது. இந்த ஏரியின் உபரிநீர் வெளியேற அமைக்கப்பட்டு இருந்த 4 கால்வாய்களில் ஆக்கிரமிப்புகள் உள்ளதால் தண்ணீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஏரியின் கரையில் கசிவு ஏற்பட்டதால் உஷாரான சித்தூர் மாவட்ட நிர்வாகம், உடனடியாக ஏரி கரையை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டது. மேலும் ஏரியை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஏரி கரை அருகே உள்ள 18 கிராம மக்களும் அப்புறப்படுத்தப்பட்டு திருப்பதியில் உள்ள தனியார் கல்லூரியில் மற்றும் திருச்சானூரில் உள்ள பத்மாவதி நிலையத்தில் தங்கவைக்கப்பட்டு இருக்கின்றனர்.
ஒரு வேளை திருப்பதியில் உள்ள இந்த ஏரி உடைந்தால் காளகஸ்தி உள்பட 80 கிராமங்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனிடையே ஆந்திராவில் பெய்த கனமழையால் நெல்லூர் மற்றும் கடப்பா மாவட்டத்தில் மேலும் 18 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் அங்கு பலியானோரின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்துள்ளது.
Tags:
Rayalacheruvuமேலும் செய்திகள்
இந்தியாவில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் பாதிப்பு 17,073 ஆக பதிவு... 24 மணி நேரத்தில் 21 பேர் பலி!!
ஜனாதிபதி தேர்தல்... இன்று வேட்பு மனு தாக்கல் செய்யும் எதிர்க்கட்சி பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹாவுக்கு டிஆர்எஸ் கட்சி ஆதரவு!!
அதிகாரிகளின் பாஸ்வேர்டை திருடி வருமான வரித்துறையில் ரூ.1.39 கோடி கையாடல்
அசாமில் இப்படியும் ஒரு ஆபத்து காண்டாமிருகங்களுக்கு எமனாகும் களைகள்: உணவை நஞ்சாக்கி உயிரை பறிக்கும்
ஆன்லைனில் இன்று டிக்கெட் வெளியீடு திருப்பதி ஆர்ஜித சேவைக்கு குலுக்கலில் பக்தர்கள் தேர்வு
செய்திகளை வெளியிடும் பத்திரிகைகள் எப்ஐஆரில் உள்ள தகவலை சரிபார்ப்பது கட்டாயமில்லை: நாக்பூர் நீதிமன்றம் அதிரடி
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!