இனி தட்கல் கட்டணம் கிடையாது பழைய எண், வழக்கமான கட்டணத்தில் ரயில்கள் விரைவில் இயக்கம்: தெற்கு ரயில்வே அறிவிப்பு
2021-11-22@ 02:03:01

சென்னை: பண்டிகை கால ரயில்களில் இனி தக்கல் டிக்கெட் கட்டணம் வசூலிக்கப்படாது. வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும். இன்னும் 6 நாட்களிலேயே அனைத்து ரயில் எண்களும் வழக்கமான எண்களாக மாற்றப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில்: இந்திய ரயில்வே வாரியம், கடந்த 12ம் தேதி முதல் அனைத்து சிறப்பு ரயில்களும் வழக்கமான கட்டணத்தில் வழக்கமான ரயில்களாகவும், வழக்கமான ரயில் எண்களிலும் இயக்கலாம் என அனுமதி அளித்தது. அதன்படி தெற்கு ரயில்வே மண்டலம் சென்னையில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில் 86 விடுமுறைகால மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்களுக்கான டிக்கெட் கட்டணம், தட்கல் கட்டணத்தில் இருந்து வழக்கமான கட்டணமாக மாற்றப்பட்டுள்ளது.
இதைப்போன்று மற்ற ரயில்வே மண்டலங்களிலும், கூடுதலாக வசூலிக்கப்பட்ட டிக்கெட் கட்டணம் குறைக்கப்பட்டு நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் மெயில் மற்றும் எக்ஸ்பிரஸ் சிறப்பு ரயில்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டதால் அதில் எந்தவித கட்டண குறைப்பு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்தியன் ரயில்வேயின் 5 மண்டலத்தில் உள்ள டிக்கெட் தரவு மையத்தில், ரயில் எண்கள், மீண்டும் வழக்கமான எண்களாக மாற்றம் செய்யும் பணிகள் நடந்து வந்ததால் கடந்த 14ம் தேதி முதல் 21ம் தேதி வரை நடந்தது. இந்நிலையில் தற்போது அந்த பணி நிர்ணயிக்கப்பட்ட காலத்தை விட ஒரு நாள் முன்பு அதாவது கடந்த 20ம் தேதியே முடிவடைந்து 6 நாட்களிலேயே தெற்கு ரயில்வேயில் அனைத்து ரயில் எண்களும், வழக்கான எண்களாக மாற்றப்பட்டுள்ளது.
மேலும் செய்திகள்
பல கிராமங்களுக்கு மின்சாரம் இன்னும் சென்று சேரவில்லை என்பதை ஒப்புக் கொள்வதில் எந்த தவறும் இல்லை : மோடி மீது ப.சிதம்பரம் அட்டாக்
சென்னை ராஜீவ்காந்தி சாலையில் உள்ள நாவலூர் சுங்கச்சாவடியில் ஜூலை 1 முதல் சுங்க கட்டணம் உயர்வு... வாகன ஓட்டிகள் அதிர்ச்சி!!
தாம்பரம் மாநகராட்சி பகுதிகளில் சாலையில் குவித்து வைக்கப்படும் கட்டிட மற்றும் மரக்கழிவுகள்: கொசு உற்பத்தி அதிகரிப்பு
செங்கல்பட்டு அருகே முகம் சிதைத்து வாலிபர் கொலை: மர்ம கும்பலுக்கு போலீஸ் வலை
லோக் அதாலத்தில் 5204 வழக்குகளுக்கு தீர்வு
புழல் சிறை காவலர் குடியிருப்பில் நிரம்பி வழியும் கழிவுநீர் தொட்டி: சுற்றுப்பகுதி மக்கள் பாதிப்பு
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!