புரட்சி பாரதம் கட்சி மறியல்
2021-11-22@ 00:17:58

திருவள்ளூர்: வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் விரிஞ்சிபுரம் தரைப்பாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அருகில் உள்ள காமராஜர் புறத்தில் தண்ணீர் புகுந்ததால் அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து கேவிகுப்பம் எம்எல்ஏவும், புரட்சி பாரதம் கட்சியின் தலைவருமான பூவை எம்.ஜெகன்மூர்த்தி நேரில் ஆய்வு செய்து உடனடியாக மாவட்ட ஆட்சியருக்கு தகவல் கொடுத்தார். மாவட்ட ஆட்சியர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நேரில் வராததால் பொதுமக்களுடன் கே.வி.குப்பம் பேருந்து நிலையம் அருகில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து எம்எல்ஏ பூவை எம்.ஜெகன்மூர்த்தி கைது செய்யப்பட்டார். இதனை கண்டித்து திருவள்ளூரில் மாவட்ட செயலாளர் கூடப்பாக்கம் இ.குட்டி, வழக்கறிஞர் பிரிவு மாநில பொது செயலாளர் கே.எம்.ஸ்ரீதர் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சி.பி.குமார், நயப்பாக்கம் டி.மோகன், டி.கே.சீனிவாசன், பி.தாமஸ், எஸ்.பார்த்திபன், எம்.எழில்வண்ணன், புங்கத்தூர் டி.தேவா, செஞ்சி ஜவகர் ஆகியோர் முன்னிலையில் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்கு வரத்து பாதிப்பு ஏற்பட்டது.
மேலும் செய்திகள்
மீட்பு பணியில் மந்தம்: கடற்கரையில் மயக்க நிலையில் நான்கு மணி நேரமாக உயிருக்கு போராடும் இலங்கை அகதிகள்
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!: பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி!!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கணவன், மனைவி தஞ்சம்..!!
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் குடோனில் தீ: பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் நாசம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!