SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

வட மாவட்டங்களில் வெள்ளநீர் சூழ்ந்த 97 பகுதிகளில் 1,947 நபர்கள் பாதுகாப்பாக மீட்பு; தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை தகவல்

2021-11-20@ 19:35:10

சென்னை: வடகிழக்கு பருவமழை மற்றும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தினால் ஏற்பட்டுள்ள தொடர் மழை பொழிவு மற்றும் பெருவெள்ளத்தினால் கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் வெள்ள பாதிப்புக்குள்ளாகிய பகுதிகளில் பொதுமக்களை பாதுகாக்கும் விதமாக தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குநர் உயர்திரு. கரன் சின்ஹா அவர்களின் உத்தரவின் பேரில் தென்மண்டலத்திலிருந்து கூடுதலாக 300 தீயணைப்பு வீரர்கள் 10 நீர் இறைப்பு பம்புகள், படகுகள் மற்றும் இதர மீட்பு உபகரணங்களுடன் வரவழைக்கப்பட்டு கூடுதல் இயக்குநர் (பயிற்சி மற்றும் செயல்பாடுகள்) திரு.விஜயசேகர், இணை இயக்குநர் மாநில பயிற்சி மையம் திருமதி. மீனாட்சி விஜயகுமார் மற்றும் துணை இயக்குநர் வடமேற்கு மண்டலம் திரு.சரவணகுமார் அவர்களின் தலைமையில் முழு வீச்சில் மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.

கடலூர் மாவட்டம் சிறியகங்கணாங்குப்பம் கிராமத்தினை தென்பண்ணையாற்றின் வெள்ளநீர் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் சிக்கி தவித்த பொதுமக்கள் 50 நபர்கள் கடலூர் சிப்காட் தீயணைப்பு குழுவினரால் இரப்பர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர். இராணிப்பேட்டை மாவட்டம், வாலஜபாத் வட்டம், தேவதானம் கிராமத்தினை பாலாற்றின் வெள்ளநீர் சூழ்ந்ததால் வெளியேற முடியாமல் சிக்க தவித்த பொதுமக்கள் 30 நபர்களை இராணிப்பேட்டை தீயணைப்பு குழுவினரால இரப்பர் படகுகள் மற்றும் மீட்பு உபகரணங்கள் மூலம் பாதுகாப்பாக மீட்டனர்.  

கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவடட்டங்களில் கடந்த 2 தினங்களில் வெள்ளநீர் சூழ்ந்த 97 பகுதிகளில் சிக்கி தவித்த பொதுமக்கள் 1947 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர். 28 குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீர் பம்புகள் மூலம் நீர் இறைக்கப்பட்டும், 47 இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் விசை ரம்பங்கள் கொண்டு அகற்றபட்டது. மேலும் 835 எண்ணிக்கையிலான விலங்குகள் காப்பாற்றப்பட்டன.

127 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டு தீ அணைக்கப்பட்டது. சென்னையில் வெள்ளத்தினால் அதிகம் நீர்தேங்கி பாதிப்பிற்குள்ளாக கூடிய பகுதிகளான தாம்பரம் முடிச்சூர், தி.நகர் பசுல்லா சாலை, கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் சுரங்கப்பாதை, கொளத்தூர் ஜவஹர்நகர், பெரியார்நகர், கொரட்டூர் மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 50 நீர் இறைப்பு பம்புகள், படகுகள் மற்றும் இதர மீட்பு உபகரணங்களுடன் தீயணைப்பு வீரர்கள் 20 நபர்கள் கொண்ட 2 கமாண்டோ படைகள் மீட்புப்பணிகளில் ஈடுபட ஆயத்த நிலையில் நிலைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர்.சென்னையில் மட்டும் 1150 அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் போர் கால அடிப்படையில் பணிபுரிய தயார் நிலையில் உள்ளனர்.

சென்னை மணலி அருகிலுள்ள சடையங்குப்பம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றின் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக வெள்ளநீர் தீவு போல் சூழ்ந்துள்ளதாலும் வெள்ளநரீ ; மட்டம் உயர்நது; கொண்டே வருவதாலும் வெளியேற மறுத்து வரும் கிராம மக்களை பாதுகாக்கும் விதமாக இரப்பர் படகு மற்றும் மீட்பு உபகரணங்களுடன் சென்னை தீயணைப்பு கமாண்டோ வீரர்கள் 20 நபர்கள் உடன் இருந்து பாதுகாத்து வருகின்றனர். சென்னையில் 217 குடியிருப்புகளில் சூழ்ந்துள்ள தண்ணீரினை பம்புகள் மூலம் நீர் இறைக்கப்பட்டும், தாழ்வான பகுதிகள் மற்றும் குடியிருப்புகளில் சிக்கி தவித்த 1808 நபர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டும், 217 இடங்களில் சாலைகளில் விழுந்த மரங்கள் விசை ரம்பங்கள் கொண்டு அகற்றபட்டதுடன், 285 எண்ணிக்கையிலான விலங்குகள் காப்பாற்றப்பட்டன. 127 இடங்களில் தீவிபத்து ஏற்பட்டு தீ அணைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
 • om-mathan-kark

  சாதனை படைக்க வயசு தடை இல்லை: எவரெஸ்ட் அடிவாரத்துக்கு நடந்தே சென்று சாதித்த 6 வயது சிறுவனின் சாகச பயணம்..!

 • landslide-colombia

  கொலம்பியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 அதிகரிப்பு..!

 • tirupati-murmu-5

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சுவாமி தரிசனம்..!!

 • brazil-rain-landslide-2

  தொடர் மழையால் அதிரும் பிரேசில்!: நீரில் அடித்து செல்லப்பட்ட வாகனங்கள்.. நிலச்சரிவில் சிக்கி 2 பேர் பலி..!!

 • kujarat-election

  குஜராத் மாநிலம் சட்டசபை தேர்தலில் வாக்களிக்க ஆப்பிரிக்க மக்களுக்கென பிரத்யேக பூத்: உணவு, ஆட்டம் பாட்டத்துடன் கொண்டாடிய மக்கள்..!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்