பஞ்சாப், உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலுக்காகவே 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெறுகிறது பிரதமர் மோடி அரசு : எதிர்க்கட்சிகள் கடும் தாக்கு!!
2021-11-19@ 10:20:33

டெல்லி : டெல்லியில் வேளாண் சட்டங்களை எதிர்த்து ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வரும் நிலையில், 3 வேளாண் சட்டங்களை வாபஸ் பெற முடிவு செய்து இருப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வேளாண் சட்டங்களை முறைப்படி திரும்பப் பெற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறிய அவர், வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகள், தங்களது போராட்டத்தை கைவிட வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த நிலையில், அடுத்த ஆண்டு பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலுக்காகவே வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றனர்
காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி
நாட்டுக்கு உணவளிக்கும் விவசாயிகளின் சத்தியாகிரகத்திற்கு ஆணவம் தலை குனிந்தது; அநீதிக்கு எதிரான வெற்றிக்கு வாழ்த்துக்கள் என வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கருத்து தெரிவித்துள்ளார்.
திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்
வேளாண் சட்டங்கள் வாபஸ் குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன், 'வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த ஒன்றிய அரசு, தற்போது 5 மாநில தேர்தல் வரும் நிலையில் அவசர அவசரமாக இந்த சட்டத்தை திரும்ப பெறும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள். தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்; தேர்தலுக்கு பிறகு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார்கள்,'என கூறினார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்
காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம்,' தேர்தல் அச்சம் காரணமாக 3 வேளாண் சட்டங்களை பிரதமர் வாபஸ் பெற்றுள்ளார்.ஜனநாயக முறையிலான போராட்டத்தால் பெற முடியாத வெற்றி, தேர்தல் காரணமாக நமக்கு கிடைத்துள்ளது. எனினும் விவசாயிகளுக்கும் காங்கிரசுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி இது, ' என்றார்.
Tags:
வேளாண்மேலும் செய்திகள்
சிறை தண்டனை அனுபவித்து வரும் சித்துவின் மனைவிக்கு புற்றுநோய்: கணவர் குறித்து உருக்கமான பதிவு
ராகுலின் தகுதிநீக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது; எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கும் பாஜக: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்..!
ஜார்க்கண்டில் வீட்டின் மீது மோதிய கிளைடர் விமானம்: இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்..!!
சித்தூர் எம்எஸ்ஆர் சர்க்கிள் பகுதியில் சாலையில் பெருக்கெடுத்து ஓடும் கழிவுநீர்-வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதி
கொரோனா காலத்தில் பரோலில் விடுவிக்கப்பட்ட கைதிகள் சரணடைய வேண்டும்: உச்சநீதிமன்றம் உத்தரவு
சூர்ப்பனகையுடன் ஒப்பிட்டு பேசியதால் மோடிக்கு எதிராக அவதூறு வழக்கு தொடர்வேன்: காங்கிரஸ் மூத்த தலைவர் அதிரடி
ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள செல்பிக்கள்
தைவானில் உள்ள தைபே ஃபேஷன் வீக் பாரம்பரிய உடைகளில் கவனம் செலுத்துகிறது..!!
தண்ணீரில் நகரம் .. கண்ணீரில் மக்கள்... கலிஃபோர்னியாவை புரட்டிப்போட்ட பேய் மழை, சூறைக்காற்று!!
பாகிஸ்தான்,ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 9 பேர் பலி
டோக்கியோ, வாஷிங்டன், பெய்ஜிங்கில் செர்ரி மலரும் பருவம் தொடக்கம்..!!