தொழில்நுட்பமும், தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறிவரும் சகாப்தத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம்: சிட்னி உரையாடலில் பிரதமர் மோடி உரை
2021-11-18@ 11:58:19

டெல்லி: ஜனநாயக நாடுகள் கிரிப்டோகரன்ஸிகளில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என பிரதமர் மோடி சிட்னி உரையாடலில் பேசினார். பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொடக்க சிட்னி உரையாடலில் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப பரிணாமம் மற்றும் புரட்சி என்ற கருப்பொருளில் சிறப்புரை ஆற்றினார். இந்த உரைக்கு முன்னதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் அறிமுகக் குறிப்புகளை வழங்கினார். அவை எங்கள் இளைஞர்களைக் கெடுக்கக்கூடிய தவறான கைகளில் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என உரையாற்றினார். தொழில்நுட்பமும், தரவுகளும் புதிய ஆயுதங்களாக மாறிவரும் சகாப்தத்தின் காலத்தில் நாம் இருக்கிறோம். ஜனநாயகம் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு அவசியமானது, அது தேசிய உரிமைகளை அங்கீகரிக்க வேண்டும், வர்த்தகம், முதலீடு மற்றும் பொது நலன்களை ஊக்குவிக்க வேண்டும்.
உதாரணமாக கிரிப்டோகரன்சி மற்றும் பிட்காயின் விஷயத்தில் அனைத்து ஜனநாயக நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம், அது தவறான கைகளில் போய்விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என பேசினார். வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகிலும் இந்தியாவின் முக்கிய பங்கை அங்கீகரிப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். டிஜிட்டல் யுகத்தின் நன்மைகளைக் குறிப்பிட்ட பிரதமர், கடல்-படுக்கையிலிருந்து சைபர் முதல் விண்வெளி வரையிலான பல்வேறு அச்சுறுத்தல்களில் உலகம் புதிய அபாயங்கள் மற்றும் புதிய வடிவிலான மோதல்களை எதிர்கொள்கிறது என்றும் கூறினார். ஜனநாயகத்தின் மிகப்பெரிய பலம் வெளிப்படையானது. அதே நேரத்தில், இந்த வெளிப்படைத்தன்மையை ஒரு சில சுயநலவாதிகள் தவறாக பயன்படுத்த அனுமதிக்கக்கூடாது என பேசினார்.
மேலும் செய்திகள்
ஒன்றிய தகவல் ஆணையம் உத்தரவு ரத்து பிரதமர் மோடி கல்வித் தகுதி தகவல் தர வேண்டியதில்லை: டெல்லி முதல்வருக்கு ரூ.25,000 அபராதம் குஜராத் உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
ராமநவமி கலவரம் மேற்கு வங்கத்தில் 144 தடை உத்தரவு அமல்: உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
0.1 முதல் 0.7 சதவீதம் வரையிலும் சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி விகிதம் உயர்வு
கொசுவர்த்தி சுருளால் தீ பற்றி 6 பேர் பலி
தற்கொலை எண்ணத்தை மாற்ற ராகுல் காந்திதான் காரணம்: ரம்யா உருக்கம்
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்கள் தாக்கல்
ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!
இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்
பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!
அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!
மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!