பெண்களுக்கு சம சொத்துரிமைகள் வழங்குக... நாடு முன்னேற பெண்களுக்கு முழு அதிகாரம் அளிப்பது முக்கியம் : குடியரசுத் துணைத் தலைவர் வலியுறுத்தல்
2021-11-15@ 11:07:21

டெல்லி : பெண்களுக்கு சம சொத்துரிமை அளிக்க வேண்டும் எனவும், நாடு முன்னேற பெண்களுக்கு முழு அதிகாரம் அளிப்பதன் முக்கியத்துவத்தையும் குடியரசுத் துணைத் தலைவர் எம்.வெங்கையா நாயுடு வலியுறுத்தியுள்ளார்.ஆந்திர மாநிலம் நெல்லூர் வெங்கடாச்சலம் பகுதியில் ஸ்வர்ண பாரத் அறக்கட்டளையின் 20ம் ஆண்டு கொண்டாட்டங்களில் குடியரசுத் துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் பேசிய அவர் கூறியதாவது:நாட்டின் மக்கள் தொகையில் 50 சதவீதம் பேர் பெண்கள். பல துறைகளில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் பங்குபெறுவதை ஊக்குவிக்க வேண்டும்.பெண்களுக்கு எதிரான அடக்குமுறைகளை தடுக்க வேண்டும். பல தொழில்களில் பெண்களுக்கு பயிற்சி அளிக்கப்பட வேண்டும். நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.
ஊரக பகுதிகளைச் சேர்ந்த பின்தங்கிய மக்களின் கனவுகளை நிறைவேற்ற, ஸ்வர்ண பாரத் அறக்கட்டளை பணியாற்றியுள்ளது திருப்தி அளிக்கிறது. இதில் பலர் வெற்றிகரமான தொழில் முனைவோர்களாக மாறியுள்ளனர். ஏழைகளை கல்வி மற்றும் தொழிற் கல்வி மூலமாக முன்னேற்ற வேண்டும். வேளாண்மை மீது அனைத்து தரப்பினரும் கவனம் செலுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள், தயக்கத்தை போக்கி தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும்.இவ்வாறு வெங்கையா நாயுடு கேட்டுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
எம்.வெங்கையா நாயுடுமேலும் செய்திகள்
மீட்பு பணியில் மந்தம்: கடற்கரையில் மயக்க நிலையில் நான்கு மணி நேரமாக உயிருக்கு போராடும் இலங்கை அகதிகள்
தமிழகத்தில் நிறுத்தி வைக்கப்பட்ட 34 ரயில் சேவைகள் மீண்டும் பயன்பாட்டிற்கு வருவதாக தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு!!
சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது!: பக்தர்கள் திரளாக பங்கேற்று வழிபாடு..!!
தூத்துக்குடி மாவட்டத்தில் புதிய சிப்பெட் மையம் அமைக்கப்படும் :ஒன்றிய அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி!!
இலங்கையில் தொடரும் பொருளாதார நெருக்கடி: ராமேஸ்வரம் கடற்கரையில் மயங்கிய நிலையில் கணவன், மனைவி தஞ்சம்..!!
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரயில் குடோனில் தீ: பல லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் நாசம்
இஸ்ரேலில் உள்ள பாலைவனத்தில் நடத்தப்பட்ட அகழ்வாராய்ச்சியில் பழங்கால மசூதி கண்டுபிடிப்பு..!!
ஈக்வேடாரில் தொடர்ந்து உயரும் எரிபொருட்களின் விலையால் பொதுமக்கள் சாலையில் போராட்டம்..!!
புதுச்சேரியில் இன்று பள்ளிகள் திறப்பு: மாணவர்களை உற்சாகமாக வரவேற்ற ஆசிரியர்கள்..!!
50 ஆண்டுகளில் முதன்முறையாக தொடங்கிய சில நிமிடங்களிலேயே முடிந்தது அதிமுக பொதுக்குழு கூட்டம்..!!
பாகிஸ்தானில் 48 செ.மீ. நீளமுடைய காதைக் கொண்டு உலக சாதனை படைத்த சிம்பா ஆட்டுக்குட்டி..!!!