SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

செய்யூர் மற்றும் மதுராந்தகம் தொகுதியில் புதிய மின்மாற்றிகள் இயக்கம்: எம்எல்ஏ பாபு துவங்கி வைத்தார்

2021-10-29@ 00:16:06

செய்யூர்: செய்யூர் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மின்வாரியம் சார்பில் அமைக்கப்பட்ட புதிய மின்மாற்றிகள் செய்யூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு திறந்து வைத்தார். மின்தடையில்லா தமிழகம் என்ற திட்டத்தின் கீழ்  தமிழகம் முழுவதும் பல கோடி மதிப்பில் மின் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின் கீழ் அச்சிறுப்பாக்கம் மின் கோட்டம், செய்யூர் தொகுதிக்கு உட்பட்ட சூனாம்பேடு, கெங்கதேவன் குப்பம், மடையம்பாக்கம், மேல்மருவத்தூர், அம்பேத்கார் காலனி, வன்னியநல்லூர், தேன்பாக்கம், மதுராந்தகம் தொகுதிக்கு உட்பட்ட சோத்துபாக்கம், காந்தி நகர் ஆகிய 9 கிராம பகுதிகளில் கடந்த 10ஆண்டு காலமாக குறைந்த மின்னழுத்த பிரச்னை இருந்து வந்தது.

இக்கிராம மக்களின் மின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ரூ.4 கோடி தமிழக அரசு நிதி ஒதுக்கியது. இதனை தொடர்ந்து, மின்வாரியம் சார்பில் 25 கே.வி.எ. கொண்ட 9 புதிய மின்மாற்றிகள் அந்தந்த கிராம பகுதியில்  அமைப்பட்டது.   மின்மாற்றிகள் செயல்பாட்டு தொடக்க நிகழ்ச்சியை  செய்யூர் சட்டமன்ற உறுப்பினர் பனையூர் பாபு நேற்று கலந்துகொண்டு புதிய மின்மாற்றி செயல்பாட்டை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர் சிற்றரசு, மாவட்ட கவுன்சிலர் சாந்தி ரவிகுமார், ஒன்றிய கவுன்சிலர் ஜீவா பூலோகம், சூனாம்பேடு ஊராட்சி மன்ற தலைவர் கண்ணன், துணை தலைவர் விஜியா தெய்வசிகாமணி, வன்னியநல்லூர் ஊராட்சி மன்ற தலைவர் பிரகாஷ்,  காவனூர் வரதராஜன், அச்சிறுப்பாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர்கள் கிறிஸ்டோபர் லியோராஜ், கிருபானந்தன், உதவி செயற்பொறியாளர்கள் தனசேகரன், மகேஸ்வரன், துரைராஜ் மற்றும் பிரிவு பொறியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • well-collapes-31

    ராம நவமி விழாவில் சோகம்: இந்தூரில் கோயில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்து விபத்து.. 35 பேர் பரிதாப உயிரிழப்பு..!!

  • parliammmm_moddi

    இறுதி கட்டத்தில் புதிய நாடாளுமன்ற பணிகள்..பிரதமர் மோடி திடீர் விசிட்..தொழிலாளர்களுடன் உரையாடினார்

  • boat-fire-philippines

    பிலிப்பைன்ஸ் நாட்டில் பயணிகள் படகில் ஏற்பட்ட தீவிபத்தில் 31 பேர் உடல் கருகி பலி..!!

  • us-desert-train-acci-30

    அமெரிக்காவில் பாலைவனப்பகுதியில் இரும்பு தாது ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து..!!

  • mexico-123

    மெக்சிகோவில் புலம் பெயர்ந்தவர்கள் தங்கி இருந்த மையத்தில் பயங்கர தீ விபத்து: 39 பேர் உடல்கருகி பலி; 29 பேர் படுகாயம்..!!

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்