போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுடன் செல்பி எடுத்தவர் கைது!
2021-10-28@ 11:07:02

மும்பை : போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்யன் கானுடன் செல்பி எடுத்தவர் கைது செய்யப்பட்டார். மும்பை: மும்பை அருகே கப்பலில் போதை விருந்து நடத்தியதாக தேசிய போதை பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் (என்சிபி) நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். தற்போது மும்பை சிறையில் அடைக்கப்பட்டு இருக்கும் ஆர்யனின் ஜாமீன் மனு தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆர்யன் கைதில் சாட்சியாக இருந்த கிரண் கோசாவி போதை பொருள் வழக்கில் இருந்து அவரை விடுவிக்க ஷாரூக் கான் தரப்பிடம் பேரம் பேசியதாக புகார் எழுந்தது.
போதைப் பொருள் தடுப்புப் பிரிவில் சில அதிகாரிகளும் இதற்கு உடந்தை என்று கோசாவியின் உதவியாளரும் வழக்கின் மற்றொரு சாட்சியுமான பிரபாகர் கூறியுள்ளார். என்சிபி மும்பை மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவிற்கு இதில் தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கிடையே ஷாரூக் கானிடம் பேரம் பேசியதாக கூறப்படும் வழக்கில் முக்கிய சாட்சியான கிரண் கோசாவியை காவல் துறையினர் தீவிரமாக தேடி வந்தனர்.உயிருக்கு ஆபத்து இருப்பதால் தலைமறைவாகி இருப்பதாகவும் உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் காவல் துறையிடம் சரண் அடைய இருப்பதாக சில நாட்களுக்கு முன்பு கோசாவி கூறி இருந்தார். இந்த நிலையில், 20 நாட்களுக்கு போலீசாருக்கு போக்கு காட்டி வந்த கோசாவியை புனே நகரத்தில் காவல் துறையினர் பொறிவைத்து பிடித்துள்ளனர்.
ஆனால் 2018ம் ஆண்டு நடைபெற்ற மோசடி வழக்கு தொடர்பாகவே அவரை கைது செய்து இருப்பதாக காவல் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புனேவில் இருந்து கோசாவியை மும்பைக்கு அழைத்து வந்து விசாரிக்க மராட்டிய காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.
Tags:
கிரண் கோசாவிமேலும் செய்திகள்
ஜம்மு-காஷ்மீரில் ராணுவ வீரர்கள் 39 பேருடன் சென்ற பேருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து: 6 பேர் பலி.. 30க்கும் மேற்பட்டோர் காயம்!!
வடக்கு வங்கக் கடலில் மற்றொரு காற்றழுத்த தாழ்வு நிலை: ஒடிசாவில் 5 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை...
பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் தலைமையிலான மாநில அமைச்சரவை விரிவாக்கம்; 31 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்பு..!!
தமிழ்நாடு- கேரள எல்லையில் வாயில் காயத்துடன் உயிருக்கு போராடும் காட்டு யானை: உடனடி சிகிச்சை அளிக்க பொதுமக்கள் கோரிக்கை
பில்கீஸ் பானோ பாலியல் வன்கொடுமை வழக்கில் 11 குற்றவாளிகள் விடுவிப்பு: குஜராத் அரசின் நடவடிக்கைக்கு அரசியல் கட்சிகள் கண்டனம்...
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை நிதி ரீதியாக பலவீனமாக்குகிறது: ஒன்றிய அரசு மீது கேசிஆர் குற்றச்சாட்டு
டெல்லியில் காங். கட்சித் தலைமை அலுவலகத்தில் சுதந்திர தின விழா கோலாகலம்: ராகுல் காந்தி, குலாம்நபி ஆசாத் உள்ளிட்டோர் பங்கேற்பு..!!
75வது சுதந்திர தின விழா: டெல்லி செங்கோட்டையில் தேசிய கொடியை ஏற்றினார் பிரதமர் நரேந்திர மோடி.. வானிலிருந்து பொழிந்த பூமழை..!!
நாட்டின் 75-வது சுதந்திர தின கொண்டாட்டம்: மூவர்ண விளக்குகளால் ஜொலிக்கும் ஒன்றிய, மாநில அரசு கட்டடங்கள்..!!
போதையைத் தவிர்..கல்வியால் நிமிர்!: தமிழக பள்ளி மாணவர்கள் போதைக்கு எதிராக உறுதிமொழி ஏற்பு..!!
கியூபாவில் பயங்கர தீ விபத்து: 17 பேர் பலி..!!