SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்

மெல்ல மெல்ல குறையும் வைரஸ் பாதிப்பு; உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கை 24.57 கோடியை தாண்டியது.! 49.87 லட்சம் பேர் உயிரிழப்பு

2021-10-28@ 07:41:48

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 49.87 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 4,987,116 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 245,743,799 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 222,726,310 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 75,419 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.57 கோடியை தாண்டியுள்ளது.

இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,57,48,985 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 22,27,37,731 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 லட்சத்து 87 ஆயிரத்து 252 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றுக்கு தற்போது 1,80,24,002 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 75,419 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

மேலும் செய்திகள்

Like Us on Facebook Dinkaran Daily News
  • sandart-18----

    ஒடிசாவில் கண்களுக்கு விருந்து படைக்கும் சர்வேதேச மணற்சிற்ப திருவிழா!: பார்வையாளர்கள் பிரம்மிப்பு..!!

  • Chennai T nagar

    சென்னை திநகர் ரங்கநாதன் தெருவில் அலைமோதிய மக்கள் கூட்டம்

  • voccc111

    இந்தோனேசியாவில் எரிமலை வெடித்தது... 11 கிராமங்களில் உள்ள வீடுகள் சாம்பலில் புதைந்தன; 14 பேர் பலி!!

  • jayall11

    மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 5-ம் ஆண்டு நினைவு தினம் : ஈபிஸ், ஓபிஎஸ், சசிகலா உள்ளிட்டோர் அஞ்சலி!!

  • tngovt05

    சென்னை துறைமுகம் சட்டமன்ற தொகுதியில் வசிக்கும் 250 வசிக்கும் குடும்பங்களுக்கு இலவச அரிசி மளிகை பொருட்கள் மற்றும் தலா ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்பட்டது.

படங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்